கட்டார் சௌதி மோதலில் பாதிக்கப்படும் பாலஸ்தீனியர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கட்டார் சௌதி மோதலில் பாதிக்கப்படும் பாலஸ்தீனியர்கள்

  • 15 ஜூன் 2017

பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பால் குற்றம் சாட்டப்படும் கட்டார், அமெரிக்காவிடமிருந்து ஆயிரத்து இருநூறு கோடி டாலர் செலவில் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

முப்பத்தி ஆறு எஃப்-15 ரக ஜெட்களை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.

இந்த விற்பனை அமெரிக்காவுக்கும் கட்டாருக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் என பெண்டகன் தெரிவித்துள்ளது.

அதேசமயம், கட்டார் மீதான சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தடை நவடிக்கை பாலஸ்தீனத்தின் காசா பகுதியை மோசமாக பாதிக்குமென அங்கு வசிப்பவர்கள் அஞ்சுகிறார்கள்.

கட்டார் நிதியால் காசா பகுதியில் கட்டப்படும் வீடுகள், மருத்துவமனைகள், சாலைப்பணிகள் நின்றுபோகுமென அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதன் பின்னணி என்ன? விளக்குகிறது பிபிசி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்