கோஷ்டி மோதலில் ஈடுபட்ட தமிழர்களுக்கு லண்டன் நீதிமன்றம் தண்டனை

  • 15 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை மெர்டன் போலீஸ்
Image caption பிரசாத் சோதிலிங்கம்

லண்டனில் இரண்டு தமிழ் கோஷ்டிகளுக்கிடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மோதலில், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தென்-மேற்கு லண்டனில் மிட்ச்சம் பகுதியில் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நடந்த இந்த கோஷ்டி மோதலில், 26 வயதான நீல் குரூஸ் என்பவரை கோடாறியால் அடித்துக்கொலை செய்த குற்றத்திற்காக, 29 வயதான பிரசாத் சோதிலிங்கம் என்பவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

மோதலின்போது கோடாறி, பாட்டில் மற்றும் கத்தி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை மெர்டன் போலீஸ்
Image caption கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட மேலும் நான்கு இளைஞர்களுக்கும் நீதிமன்றத்தினால் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நீல் குரூஸின் நண்பர் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது விரல்கள் வெட்டப்பட்டாதாகவும் கூறப்பட்டுள்ளது.

லண்டனில் பல இடங்கள் தமிழ் கோஷ்டிகள் இயங்கிவந்த நிலையில், காவல்துறையின் முன்னெடுத்த நடவடிக்கைகளினால் அவை கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள் :

லண்டன் தீ: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு

தமிழக விவசாய பல்கலைக்கழக சேர்க்கையில் வெற்றிபெற்ற பழங்குடி பெண்

நிலவில் உருளைக்கிழங்கு பயிரிட முடியுமா? - சீனா முயல்கிறது

கிரிமினல் விசாரணையில் டிரம்ப் தலையிட முயன்றாரா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்