லண்டன் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்திக்காததால் விமர்சனம்

மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த தீ விபத்தில் இறந்த அனைவரையும் அடையாளம் காணமுடியாமல் போகக்கூடும் என லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP/Natalie Oxford

17உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் டஜன் கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.

தீ விபத்து நடந்த கட்டத்தைப் பார்வையிட்ட பிரதமர் தெரீசா மே அங்கு குடியிருந்தவர்களை சந்திக்காதது பற்றி அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட லண்டன் நகர மேயர் சாதிக் கான், தீ விபத்து தொடர்பான பொதுவிசாரணையை நடத்த தேர்வுசெய்யப்பட்டுள்ள நீதிபதி இந்த ஆண்டின் கோடைகாலத்திலேயே அறிக்கையை வெளியிடுவார் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

இதே போன்ற கட்டிடங்களில் வாழும் மக்களின் அச்சத்தை அவர் ஒப்புக்கொண்ட அவரை மக்கள் இடைமறித்துக் கேள்விகளை எழுப்பினர். இந்த தீவிபத்திற்கு யார் பொறுப்பாக வேண்டும் என்பதை அறிய உள்ளூர் மக்கள் கோரினர்.

பிற செய்திகள்