அரபுலக மனித உரிமை மீறலுக்கு உதவும் பிரிட்டிஷ்  தொழில்நுட்பம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரபுலக மனித உரிமை மீறலுக்கு உதவும் பிரிட்டிஷ் தொழில்நுட்பம்?

  • 16 ஜூன் 2017

பிபிசியின் அரபு சேவையும், டென்மார்க் நாட்டு செய்திப் பத்திரிகை ஒன்றும் இணைந்து ஒரு வருட காலமாக நடத்திய புலனாய்வு, பிரிட்டனின் பாதுகாப்புத்துறை பெரு நிறுவனமான பிஏஈ சிஸ்டம்ஸ், அதி நவீன கண்காணிப்பு தொழில் நுட்பத்தை பல அடக்குமுறை அரசாங்கங்களை கொண்ட நாடுகள் உட்பட மத்திய கிழக்கெங்கிலும் பெருமளவில் விற்பதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளது.

இவற்றில் பிரிட்டன் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப் படக்கூடிய மின்னணு தகவலை பகுத்தறிய பயன்படும் மென்பொருளும் அடங்கும்.

சர்வதேச சட்டங்களால் இராணுவ கருவிகளாக கணிக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தில் பெரும்பாலானவை பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றினாலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இது ஒரு முக்கிய கருவி, ஆனால், பிபிசியின் நாவல் அல் மஹ்ஹஃபியின் தகவல்படி, அடக்குமுறை அரசாங்கங்களால் இவை மாற்றுக்கருத்தாளர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை மௌனிக்கச் செய்யவும் பயன்படுத்தப்படலாம்.

பிபிசியின் இவை குறித்த தகவல்.

பிற செய்திகள் :

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்களின் திகில் நினைவுகள்!

பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார் கடாஃபியின் மகன்

ஐ எஸ் அமைப்பின் தலைவரை இலக்கு வைத்து தாக்குதல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்