கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

  • 17 ஜூன் 2017

கோவை நகரதில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் சனிக்கிழமை காலை பெட்ரோல் குண்டு வீசிப்பட்ட சம்பவத்தில் அலுவலக ஜன்னல் மற்றும் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் ஒரு பகுதி சேதமடைந்தது.

தடயவியல் அதிகாரிகள் சேதமடைந்த காரின் பகுதிகளை சோதனை செய்துவருகின்றனர் என்றும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் பதிவாகியுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், விசாரணை தற்போது தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

''சமீப மாதங்களில் இதுபோன்ற பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் கோவை நகரத்தில் நடைபெறவில்லை. தற்போது கிடைத்துள்ள தடயங்களை வைத்து விசராணை நடந்துவருகிறது,'' என்றார் ஆணையர் அமல்ராஜ்.

பாஜக மற்றும் மோடி அரசின் மோசடிகளை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்கலாம்:

'தலித் வாக்குகளுக்கு மோதி போடும் வாய்ப்பந்தல்'

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

`முன்னேற்றத்தை மையப்படுத்திய மோதி அரசின் அணுகுமுறை'

''இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி கோவையில் மிகப்பெரிய கலவரைத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் கும்பல் முயன்றது. சிறுபான்மை சமூகத்தினர் இருக்கும் பகுதியில் சென்று கடைகளை அடித்து நொறுக்கியது. பல சமப்வங்களில் தோல்வி ஏற்பட்டதால் புதிய வகையில் பாஜக தாக்குதலை நடத்தியுள்ளது,'' என்று குற்றம் சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்.

பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் தங்களது கட்சிக்கு எதிராக செயல்படும் மனநிலையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் விசாரணை தொடங்கும் முன்னரே பாரதீய ஜனதாவை குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு, அதிமுகவில் என்ன நடந்தாலும் திமுகதான் காரணம் என்று சொல்வதை போல உள்ளது என்றார் தமிழிசை.

''கேரளாவில் கூட பல பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் வன்முறையை நடத்தியுள்ளனர். கோவை சம்பவத்தில் விசரணையின் முடிவு தெரிந்த பிறகுதான் எதுவும் சொல்லமுடியும்,'' என்றார் தமிழிசை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துடன், அதிமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

''ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே லட்சியத்தின் அடிப்படையில், அதிமுக அரசு வழக்கம் போல் அமைதி காக்காமல், கட்சி அலுவலகங்கள் மீது இதுமாதிரியான தாக்குதல் நடத்தும் அராஜகக் கும்பலை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய “புரட்சி” மணப்பெண்

திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம்

கத்தார் மீதான தடையும், அதன் பாதிப்பும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்