வணிகக் கப்பலோடு அமெரிக்கக் கப்பல் மோதல்: அமெரிக்கப் படையினர் 7 பேர் கதி என்ன?

அமெரிக்கக் கடற்படையின் கப்பல் ஒன்று வணிகக் கப்பலோடு மோதியதில், அமெரிக்கக் கடற்படையினர் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

அமெரிக்க பிட்ஸ்ஜெரால்டு கப்பலின் கட்டளை அதிகாரியும் காயமடைந்தோரில் அடங்குவார். அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

டெஸ்ட்ராயர் எனப்படும் வெடிகுண்டு நிரம்பிய இந்த கப்பல் யோகோசுகாவின் தென் மேற்கில் சுமார் 56 கடல் மைல் (104 கிலோமீட்டர்) தொலைவில் கொள்கலன் கப்பலோடு மோதியுள்ளது.

சனிக்கிழமை காலை சுமார் 2.30 மணிக்கு நிகழ்ந்த இந்த மோதலுக்கு பிறகு, கடற்படை கப்பலின் ஸ்டார்போர்டு பக்கத்தில் அதிக சேதம் ஏற்பட்டிருப்பதை மேலிருந்து எடுக்கப்பட்ட வான்வழி படங்கள் காட்டுகின்றன.

யோகோசுகாவிலுள்ள அமெரிக்கக் கடற்படை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர், இந்த கப்பலின் கட்டளை அதிகாரி பிரேஸ் பென்சன் உடல்நிலை ஸ்திரமாக இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA

சிதைவுகள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக இன்னும் இரண்டு சிப்பாய்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் 7வது கடற்படை டிவிட்டர் பதிவிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி நண்பகல் வேளையில், அமெரிக்க பிட்ஸ்ஜெரால்டு கப்ப்லின் உள்ளே புகுந்த வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.. இந்த கப்பல் மூழ்குவதற்கான ஆபத்தில் இல்லை என்று நம்பப்படுகிறது.

154 மீட்டர் (505 அடி) நீள இந்த கப்பல் அதனுடைய சக்தியால், கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் யோகோசுகாவுக்கு சென்று கொண்டிருப்பதாக இந்த 7வது கடற்படை கூறியுள்ளது.

பிலிப்பின்ஸ் கொடியுடன் வந்த எசிஎக்ஸ் கிரிஸ்டல் கொள்கலன் கப்பல் 30 ஆயிரம் டன்களுக்கு குறைவாக இருந்தது. இது அமெரிக்க பிட்ஸ்ஜெரால்டு கப்பலின் எடையை விட மூன்று மடங்கு அதிகமாகும்..

இந்த கப்பலின் முகப்பில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே தெரிவித்துள்ளது.

222 மீட்டர் (730 அடி) நீளமான எசிஎக்ஸ் கிரிஸ்டல் கொள்கலன் கப்பலில் இருந்தோர் யாரும் காயமடையவில்லை என்று அசோசியேடட் பிரஸ் கூறியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, அதிக தகவல்கள் வருகிறபோது, அவற்றை பிட்ஸ்ஜெரால்டு கப்பலில் இருப்போரின் குடும்பத்தினருக்கும், பொருத்தமானவற்றை பொது மக்களுக்கும் அறிவிப்போம் என்று அமெரிக்கக் கடற்படை நடவடிக்கைகளின் தலைவர் அடம் ஜான் ரிச்சட்சன் தெரிவித்திருக்கிறார்.

எமது எண்ணங்களும் கவனங்களும் பிட்ஸ்ஜெரால்டு கப்பல் அணியினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மீது இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் முதல் கப்பல் சுரங்கம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகின் முதல் கப்பல் சுரங்கம்

கரைக்கு வந்தது கப்பல்; காணாமல் போனவர் கதி..?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கரைக்கு வந்தது கப்பல்; காணாமல் போனவர் கதி..?

பிற செய்திகள்

ஊபெர் நிறுவனம் மீது இரண்டாவது முறையாக வழக்கு தொடர்ந்த பெண்

இரான் பெண்கள் புதன்கிழமை தலையில் வெள்ளைத்துணி அணிவது ஏன்?

ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய “புரட்சி” மணப்பெண்

பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவர்

அரசு பள்ளியில் மாட்டிறைச்சி சமைத்த பள்ளி முதல்வர் கைது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்