கியூபாவுடன் உறவை மேம்படுத்த ஒபாமா எடுத்த முடிவை மாற்றும் டிரம்பின் நிலைக்கு கண்டனம்

கியூபா பற்றிய கொள்கை மாற்றங்களை திரும்ப பெறுகின்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு கியூபா அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Joe Raedle/Getty Images

இருப்பினும், அதனுடைய மிகப்பெரிய அண்டை நாட்டோடு தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக, ஃப்ளோரிடாவின் மியாமியில் பேசுகிம்போது, "முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தால் தளர்த்தப்பட்ட குறிப்பிட்ட பயண மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை "முற்றிலும் ஒரு பக்க சார்பான ஒப்பந்தம்" என்று கண்டித்து பேசிய அதிபர் டிரம்ப் அவற்றை மீண்டும் கொண்டுவரப்போவதாக தெரிவித்தார்.

ஆனால், முக்கிய தூதாண்மை மற்றும் வணிக ஒப்பந்தங்களை அவர் திரும்பப் பெறபோவதில்லை.

அதிபர் டிரம்பின் இந்த கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில், தடைகளை இறுக்குகின்ற புதிய நடவடிக்கைகளை கியூபா கண்டிப்பதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், மரியாதையான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கு தயாராக இருப்பதாகவும் அது தெரிவித்திருக்கிறது.

பராக் ஒபாமா, கியூபாவோடு இருந்த வர்த்தக மற்றும் பயணத்தடையை தளர்த்தி, உறவுகள் வளர முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், பயண விதிமுறைகள், கியூபாவுக்கு நிதி அனுப்புவது போன்றவற்றை இறுக்கமாக்குவதாக புதிய கொள்கைகள் அமையும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இந்த மாற்றங்களை வெள்ளிக்கிழமை அறிவித்த அதிபர் டிரம்ப், மனித உரிமை பற்றிய கவலைகளைத் தெரிவித்து, கொடூரமான காஸ்ட்ரோ அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது "கொடுமையானது" மற்றும் "தவறாக வழிநடத்தப்பட்டது" என்று விமர்சித்தார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

அன்றிரவு, கியூபா தொலைக்காட்சியும் இதற்கு பதில் அளித்துள்ளது.

"அழுத்தங்கள், திணித்தல் மற்றும் மேலதிக நுட்பமான வழிமுறைகளில் கியூபாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளை மாற்ற நினைக்கும் எல்லா உத்தியும் தோல்வியடையும்" என்று அது தெரிவித்தது.

இருப்பினும், அதிபரம் டிரம்ப் ஒபாமாவின் ஒப்பந்தத்திலுள்ள எல்லா அம்சங்களையும் திரும்ப பெறபோவதில்லை.

ஹவானாவில் இருக்கும் அமெரிக்க ராஜ்ய அலுவலகத்தை மூடப்போவதில்லை. அமெரிக்காவில் இருந்து செல்லுகின்ற வணிக விமானங்கள் தங்கள் சேவைகளை தொடரும். கியூபாவில் இருந்து பொருட்களை வாங்கி கொண்டு அமெரிக்கர்கள் நாடு திரும்ப முடியும்.

கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு: தமிழக மக்கள் கருத்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு: தமிழக மக்கள் கருத்து

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்கா - கியூபா இடையேயான உறவை முன்னேற்ற டிரம்பிடம் கியூப தொழில் அதிபர்கள் வேண்டுகோள்

கடனை ஒரு நூற்றாண்டாக "ரம்" மதுவாக திருப்பி வழங்க எண்ணும் கியூபா

அமெரிக்கா - கியூபா இடையே 55 வருடங்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்

பிற செய்திகள்

ஊபெர் நிறுவனம் மீது இரண்டாவது முறையாக வழக்கு தொடர்ந்த பெண்

இரான் பெண்கள் புதன்கிழமை தலையில் வெள்ளைத்துணி அணிவது ஏன்?

ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய “புரட்சி” மணப்பெண்

பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்