லண்டன் தீயில் கருகிய கனவுகள், மிரட்டும் நினைவுகள் (புகைப்படங்களாக)

  • 18 ஜூன் 2017
Grenfell tower fire

மேற்கு லண்டனில் நிகழ்ந்த மிகப்பெரிய தீவிபத்து ஒன்றில் 58 பேர் காணாமல் போன நிலையில், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதி வட கென்சிங்டனிலிருந்த 24 மாடி கட்டடமான கிரென்ஃபெல் டவரில் தீ ஏற்பட்ட போது சில குடியிருப்புவாசிகள் மட்டும் தப்பித்ததாகவும், பலர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

தீயில் காயமடைந்துள்ள பலர் மருத்துவமனைகளிலும் தங்கியுள்ளனர். மேலும், சடலங்களை தேடும் பணியை அவசர சேவை பணியாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இரவு என்ன நடந்தது என்பதை புகைப்படங்கள் வாயிலாக விளக்குகிறோம்.

மிக விரைவில் கட்டடத்தை ஆக்கிரமித்த தீப்பிழம்புகள்

படத்தின் காப்புரிமை PA

ஜூன் 14 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 01.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு கென்சிங்டன் மற்றும் செல்ஸியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தொகுதிகளில் ஏற்பட்ட தீயை அடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

தீ முதலில் நான்காவது மாடியிலிருந்து ஆரம்பித்து பின்னர் வேகமாக பரவியதாக நம்பப்படுகிறது.

24 மணிக்கு நேரத்திற்கு பிறகும் அதாவது வியாழக்கிழமை அதிகாலை 01.14 மணி வரை தீ கட்டுப்பாட்டிற்கு வரவில்லை.

கட்டடத்திற்கு கடும் சேதங்களை உண்டாக்கிய தீ

மேற்கு லண்டனில் சுமார் 1,000 வீடுகளை கொண்டுள்ள ஒரு சமூக வீட்டு வளாகமான லங்காஸ்டர் வெஸ்ட் எஸ்டேட்டின் பகுதியான இந்த கிரென்ஃபெல் டவர் தீ விபத்தால் கடுமையாக சேதமடைந்தது.

கட்டடத்தின் நான்கு முகப்புகளும் சேதமடைந்தன.

சடலங்களை தேடும் பணியில் அவசர சேவை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தீ விபத்தின் பின்விளைவு மிகவும் பேரழிவாக இருந்ததால் விபத்தில் பலியான சிலரை அடையாளம் காண முடியாது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சுவர் ஒன்றில் கைப்பட எழுதப்பட்ட அஞ்சலிகளை பொதுமக்கள் விட்டு செல்கின்றனர்.

தீ விபத்து குறித்து ஒரு முழு பொது விசாரணைக்கு பிரதமர் தெரீசா மே உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், குற்றவியல் விசாரணை ஒன்றையும் போலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்:

பிபிசியின் பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்