கஜுராஹோ கோயிலில் காமசூத்ரா புத்தகம் விற்க தடை கோரும் இந்து அமைப்பு

  • 18 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை SEBASTIEN BOZON

உலகிலேயே நன்கு அறியப்பட்ட சுற்றுலா தங்களில் ஒன்றான இந்தியாவில் இருக்கும் கஜுராஹோ கோயிலில் காமசூத்ரா புத்தகத்தை விற்பதற்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்குமூக ஊடக பயன்பாட்டாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹிந்து அமைப்பு ஒன்று இந்த தடை கோரிக்கையை விடுத்துள்ளது. பாலுணர்வை தூண்டும் கலைநயமிக்க சிலைகளுக்கு இக்கோயில் பெயர் பெற்றது. பஜ்ரங் சேனா என்ற அமைப்பு புத்தக விற்பனைக்கு தடைகேட்டு உலகப் புகழ்பெற்ற கஜீராஹோ கோயில் வளாகத்திற்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்துள்ளனர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய ஜோதி அகர்வால் என்ற பெண், ''மத ரீதியிலான முக்கியத்துவத்தை இக்கோயில்கள் பெற்றுள்ளன. இந்த புனிதமான வளாகத்திற்குள் காமசூத்ரா புத்தகத்தை விற்க எவ்வாறு அனுமதிக்கிறீர்கள் ? அவ்வாறு அனுமதிப்பதன் மூலம் இளைய தலைமுறையினரிடையே எவ்வாறு நாம் நன்னெறிகளை ஏற்படுத்த முடியும்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தக விற்பனை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்குழு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோயில் வளாகத்தில் இதுபோன்ற புத்தகங்களை விற்பனை செய்வதென்பது இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என்று பஜ்ரங் சேனா தெரிவித்துள்ளது.

ஆனால், பஜ்ரங் சேனாவின் கோரிக்கையை பல இந்திய ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர். பாலுணர்வை தூண்டும் சிலைகளுக்காக உலகளவில் பிரசித்த பெற்ற கோயில்தான் கஜுராஹோ.

படத்தின் காப்புரிமை TWITTER

ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர், ''இதுபோன்ற ஆணைகளை பிறப்பிப்பதற்குமுன் கோயிலின் சுவர்களை பார்க்க வேண்டும்.'' என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பயன்பாட்டாளர் கோயிலின் புகைப்படங்களை பதிந்து, செய்தி ஒன்றை பதிந்துள்ளார். அதல், ''காமசூத்திரா புத்தக விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்குமுன், கோவிலின் சுவர்களை பார்க்க வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.

இதே கேள்வி அகர்வாலிடம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் முன்வைத்த போது, ''கோயிலில் உள்ள இதுபோன்ற சிற்பங்களை நான் எதிர்க்கவில்லை. ஆனால், பரந்த அளவில் இதற்கு ஊக்கம் அளிக்கக்கூடாது.'' என்று கூறியுள்ளார்.

இப்பிரச்சனையை தொடர்ந்து, கஜுராஹோ என்ற பெயரில் ஹேஷ்டாக் உருவாக்கி பலர் ட்விட்டரில் கருத்துக்களை பதிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை TWITTER

கஜுராஹோ கோயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இக் கோலை சுற்றிப்பார்க்க இந்தியாவுக்கு வருகின்றனர்.

இந்த கோயில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது. இந்துக்கள் மற்றும் சமணர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கஜுராஹோ கட்டப்பட்டது.

இந்தியாவில் பாலினம் மற்றும் கலாசாரம் குறித்த விவாதங்கள் வேகமெடுத்துள்ளன. 2014ல் மத்திய அரசில் மோதி ஆட்சி அமைந்தவுடன் ஹிந்து தேசியவாத குழுக்களின் செயல்பாடு மிகவும் தீவிரமாகியுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

அதேசமயம் சமூக ஊடகங்களில் இதுபோன்ற கோரிக்கைகள் கேலி செய்யப்படுகிறது.

வாகிஷ் விஷ்னோய் என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர், ''பாலியல் இனப்பெருக்கம் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. பாலியல் உறவு கொள்ளாமல் பிறப்பதற்கு ஏதேனும் ஒரு வழி இருக்கும். இதனை செய்வதால் நெறிமுறைகளுக்கு உண்மையாக இருக்கமுடியும்.'' என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்