இலங்கை: இன, மத முரண்பாடு உண்டாக்கிய சம்பவங்கள் தொடர்பாக 14 பேர் கைது

  • 18 ஜூன் 2017

இலங்கையில் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

Image caption கல் வீச்சுக்கு இலக்கான குருநாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசலை அமைச்சர் ரிஷாத் பதியுதின் பார்வையிடுகின்றார்

இன்று, ஞாயிற்றுக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை அவர் அறிவித்திருக்கின்றார்.

கைதானவர்களில் பௌத்தர்கள் மட்டுமல்ல, இரு முஸ்லிம்களும், ஒரு தமிழரும் அடங்குகின்றனர்.

ஒரு பௌத்த மதகுரு மற்றும் போலீஸாக பணிபுரிபவர் உட்பட ஏனைய 11 பேரும் பௌத்தர்கள் என அவர் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

''குறித்த 11 பேரில் பலரும் பொதுபல சேனாவுடன் நேரடி தொடர்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரு பௌத்த மதகுருமார்கள் உள்ளிட்ட மேலும் இருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றும் போலீஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி கூறியுள்ளார்.

இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அரசியல்வாதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

இதுதொடர்பான விசாரனைக்கு சட்ட மா அதிபதியின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

இலங்கை: சிறுபான்மை மத பிரிவுகளுக்கு எதிரான உரிமை மீறல்களை களைய ஜனாதிபதிக்கு கோரிக்கை

பிற செய்திகள்

கஜுராஹோ கோயிலில் காமசூத்ரா விற்க தடை கோரும் இந்து அமைப்பு

லண்டன் தீயின் திகில் நிமிடங்கள் - புகைப்படங்களாக

குறுஞ்செய்தி அனுப்பியே காதலனை தற்கொலைக்கு தூண்டியதாக காதலிக்கு சிறை!

பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்