விண்ணில் பிரசவம் - குழந்தைக்கு வாழ்நாள் இலவச விமான பயண சலுகை !

செளதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள டம்மாம் நகரிலிருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் இலவசமாக தங்களது விமானத்தில் செல்லலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN/AFP/GettyImages

162 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தில் இருந்த ஒரு பெண்ணிற்கு முன்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டதால் அந்த விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது.

விமானக் குழுவும் விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவரும் சேர்ந்து அப்பெண்ணிற்கு மருத்துவ உதவிகளை அளித்தனர்.

35,000 அடியில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது; பின்பு தாயும் சேயும் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில், தங்களது குழுவினர் கொடுக்கப்பட்ட பயிற்சியை பயன்படுத்தி உயிர் காக்கும் நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள அந்நிறுவனம் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய வில்சன் என்ற மருத்துவ நிபுணருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையில் விமானம் பறக்கும் போது பிறந்த முதல் குழந்தை என்பதால் அந்தக் குழந்தை, வாழ்நாள் முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இலவசமாக செல்லலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்:

நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்

தொடர்பை இழந்ததால் பரபரப்பு: லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்

ஆண்களின் உதவியின்றி பெண் பணியாளர்களை வைத்து சாதித்து காட்டிய ஏர் இந்தியா

சில ஏர் இந்தியா விமான சேவைகளில் பெண்களுக்கான இருக்கை ஒதுக்கீடு

பிபிசியின் பிற செய்திகள்:

லண்டனில் மசூதிக்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் மோதி ஒருவர் பலி, எட்டு பேர் காயம்

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

இந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்