லண்டன் ஃபின்ஸ்பரி பார்க் தாக்குதல் (புகைப்படத் தொகுப்பு)

  • 19 ஜூன் 2017

லண்டனின் வட பகுதியிலுள்ள ஒரு மசூதிக்கு அருகில், தொழுகை முடிந்து வந்தவர்கள் மீது, வேன் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டன் நேரப்படி நள்ளிரவு தாண்டிய சற்று நேரத்தில், ஃபின்ஸ்பரி பூங்கா மசூதிக்கு அருகில், முஸ்லிம் நலவாழ்வு இல்லத்திற்கு வெளியே, நடை பாதையில் ஏறிய அந்த வேன் மக்கள் மீது மோதியது. 48 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நள்ளிரவு தாண்டிய சற்றுநேரத்தில், லண்டனின் வடக்கிலுள்ள செவன் சிஸ்டர்ஸ் சாலையில் இருக்கும் ஃபின்ஸ்பரி பூங்கா மசூதிக்கு அருகில் தொழுகையில் இருந்து வந்தவர்களை இந்த வேன் மோதியுள்ளது.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாதிக்கப்பட்ட பலரும் ரமலான் நோன்பை முடித்த பிறகு, மாலை பிரார்த்தனையில் இருந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மசூதியை விட்டு வெளியேறியபோது, வேன் இந்த வழிபாட்டாளர்களை மோதியதாக கூறப்படுகிறது.
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாக்குதலுக்கு பின்னர் வழிபாட்டாளர்கள் தெருவில் பிரார்த்தனை செய்தனர்
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சம்பவ இடத்தில் காவல்துறையின் தடயவியல் அதிகாரிகள்
படத்தின் காப்புரிமை PA
Image caption சம்பவ இடத்தை முற்றுகையிட்டுள்ள காவல்துறையினர்

லண்டன் பள்ளிவாசலுக்கு வெளியே தாக்குதல் - ஒருவர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
லண்டன் பள்ளிவாசலுக்கு வெளியே தாக்குதல் - ஒருவர் பலி

பிற செய்திகள்

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

இந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்