பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை வென்ற மக்ரோங்கின் கட்சி

  • 19 ஜூன் 2017

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமான்வெல் மக்ரோங் வெற்றிபெற்ற சில வாரங்களுக்கு பிறகு, அவருடைய கட்சி நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை வென்றிருக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA

ஏறக்குறைய எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 577 தேசியப் பேரவை இடங்களில், மக்ரோங்கின் 'லா ரீப்ளிகன் மார்ச்' கட்சி, அதனுடைய மோடெம் கூட்டணி கட்சிகளும் இணைந்து 300க்கு மேலான இடங்களை வென்றிருக்கிறது.

2012 ஆம் ஆண்டு வாக்களித்தவர்களை விட தற்போது வாக்களித்தவர்கள் குறைவாக இருந்ததால், சிலர் எதிர்பார்த்ததைவிட வெற்றி பெற்ற இடங்கள் குறைவாகும்.

ஓராண்டுக்கு முன்னரே இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. இதிலுள்ள பாதி உறுப்பினர்களுக்கு அரசியல் அனுபவமே இல்லை.

ஃபிரான்சின் பிரதான கட்சிகள் எல்லாவற்றையும் புறந்தள்ளியுள்ள இந்த தேர்தல் முடிவு, 39 வயதான அதிபர் மக்ரோங்குக்கு , அவருடைய ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் , வர்த்தகத்திற்கு ஆதரவான சீர்திருத்தத் திட்டங்களையும், நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க தேவையான வலுவான ஆணை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஃபிரான்ஸ் அதிபருடன் காதல் மலர்ந்தது எப்படி?

தனது கட்சியில் இல்லாத ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்த மக்ரோங்

“வலுவான பிரான்ஸ் உலகத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அவசியம்"

ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங்

பிற செய்திகள்

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

இந்தியாவை மிரட்டிய ஃபகார் ஜமான் யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்