பாலி சிறையிலிருந்து சுரங்கம் வழியாக தப்பிய 4 வெளிநாட்டினர்

  • 19 ஜூன் 2017

சுரங்கம் ஒன்றை பயன்படுத்தி பாலி தீவிலுள்ள கெரோகோபான் சிறையில் இருந்து தப்பி சென்றுள்ள 4 வெளிநாட்டினரை இந்தோனீஷிய போலீஸார் தேடி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை ABC

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷௌயுன் எட்வர்ட் டேவிட்சன், பல்கேரியாவை சேர்ந்த டிமிதார் நிகோலோஃப் இந்தியாவை சேர்ந்த சையத் முகமது மற்றும் மலேசியாவை சேர்ந்த டீ கோக் கிங் ஆகிய நான்கு கைதிகளும் தப்பிவிட்டதாக இனம்காணப்பட்டுள்ளனர்.

இந்த 4 கைதிகளும் இன்னும் இந்த ரிசாட் தீவில் தான் இருக்கிறார்கள் என தான் நம்புவதாக சிறையின் ஆளுநர் டோனி நாங்கோலான் கூறியுள்ளார்.

போதை மருந்து குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளோரை இந்தோனீஷியாவிலுள்ள சிறைகள் கையாண்டு வருகின்றன. கைதிகள் தப்பிச்செல்வது இங்கு பொதுவானதே.

போதை மருந்து மற்றும் மோசடி குற்றங்களுக்காக இந்த நான்கு பேரும் சிறை தண்டனை அனுபவித்து வந்தனர்.

படத்தின் காப்புரிமை ABC

15 மீட்டர் நீளமான குறுகிய சுரங்கப்பாதையை இணைக்கின்ற வெளிப்புற சுவரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 50க்கு 70 சென்டிமீட்டர் அளவுள்ள துவாரம் வழியாக இவர்கள் தப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தண்ணீர் வழிந்தோட பயன்படுத்தப்பட்ட ஏற்கெனவே இருந்த சுரங்கப்பாதை இது என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள்கிழமை காலை நடத்திய வழக்கமான சோதனையின்போது, இந்த நால்வரும் அங்கு இல்லாததை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஆஸ்திரேலிய பிரஜையான ஷௌயுன் டேவிட்சனின் சிறை தண்டனை நிறைவுபெற 3 மாதங்களுக்கும் குறைவாக இருந்தது என்று இந்த சிறையின் ஆளுநர் கூறியுள்ளார்.

இந்த சிறையிலுள்ள சில காவலர்கள் கடுமையாக நடந்து கொள்வதாகவும், மோசமாக நடத்துவதாகாவும் சிறைக்கைதிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

பிற செய்திகள்

கிரிக்கெட்: தோல்வித் துயரத்தை மீம்களில் கரைக்கும் ரசிகர்கள் !

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்