லண்டன் தீ: 79 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

கடந்த வாரம் லண்டனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப் பிடித்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனதால் உயிரிழந்தவர்களாகக் கருதப்படுவர்களின் எண்ணிக்கை 79ஆக இருக்கலாம் என்று தாங்கள் நம்புவதாக லண்டன் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption லண்டன் தீயில் உயிரிழந்தோருக்கு அவசர சேவை ஊழியர்கள் தலைநகரில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்

உயிரிழந்தவர்களில் 5 பேரின் அடையாளம் தற்போது முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் மாறக்கூடும் என்று போலீஸ் அதிகாரி ஸ்டூவர்ட் கண்டி தெரிவித்துள்ளார்.

கிரென்ஃபெல் அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் இறந்தவர்களில் எல்லோரையும் அடையாளம் காண முடியாமல் போகலாம் என்று மீண்டும் தெரிவித்த அவர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைய இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை PA

தீப் பிடிக்கக் காரணமானவர்கள் என யாராவது இருந்தால், அவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து பற்றிய பொது விசாரணைக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் நிலையில் இருப்பதாகப் பிரதமர் தெரீசா மேயின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்கலாம்:

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

ஊழல் புகார் நிரூபிக்கப்படாத அமைச்சர்களின் தண்டனையை திருத்த விக்னேஸ்வரன் இணக்கம்

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்