3 இரான் ராணுவ உயரதிகாரிகளை கைது செய்தது சௌதி ராணுவம்

  • 19 ஜூன் 2017

இரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த புரட்சிப் படை என்ற பிரிவின் மூன்று பேர், சௌதி ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக சௌதி அரேபியாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை ATTA KENARE/AFP/GettyImages
Image caption கோப்புப்படம்

வெள்ளிக்கிழமையன்று, சௌதி அரேபியாவின் கடற்பரப்பிலுள்ள மார்ஜான் எண்ணெய் வயலை நெருங்கி வந்த ஒரு படகில் இரான் படையின் உயரதிகாரிகள் இருந்தனர் என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

மூன்று படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த எண்ணெய் வயல் மீதான தீவிரவாத தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததாக சௌதி செய்தி நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

அலைகளால் ஒரு எண்ணெய் வயலை நோக்கி அடித்துச் செல்லப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகள் மீது, சௌதி எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாக இரானிய ஊடகங்கள் சனிக்கிழமையன்று தெரிவித்தன.

சௌதி - கட்டார் மோதல்: டொனால்ட் ட்ரம்ப் காரணமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மத்திய கிழக்கில் மற்றொரு மோதல்: டொனாட்ல் ட்ரம்ப் காரணமா?

தொடர்புடைய செய்திகள்

கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது இரான்

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர்

பிற செய்திகள்

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?

தேங்காய் எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியமானதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

ஊழல் புகார் நிரூபிக்கப்படாத அமைச்சர்களின் தண்டனையை திருத்த விக்னேஸ்வரன் இணக்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்