அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகம்: ஆண்டிற்கு 1,300 அமெரிக்க குழந்தைகள் இறப்பு

  • 20 ஜூன் 2017

அமெரிக்காவில் குழந்தைகள் இறந்து போவதற்கு மூன்றாவது முக்கிய காரணம் துப்பாக்கி பிரயோகத்தால் நடைபெறும் வன்முறைகள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

2007 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கிடையிலான காலத்தில், விபத்துக்களும் நோய்களுமே 18 வயதுக்கு கீழானவர்களை கொன்றதில், துப்பாக்கி வன்முறையை விட பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்று , நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு காட்டுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு மரணங்களில் , அதிகரித்து வரும் அளவில், அதாவது சுமார் 40 சதவீத மரணங்கள், தற்கொலையால் ஏற்படுகின்றன; அதிலும் வெள்ளையின மற்றும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட குழந்தைகள் , கறுப்பின அல்லது ஹிஸ்பானிய சமூகங்களை சேர்ந்த சிறார்களைக் காட்டிலும், தங்கள் வாழ்க்கையை இவ்வழியில் முடித்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது.

பிற செய்திகள்:

திருமணத்திற்கு பின் மினி ஸ்கிர்ட் அணியக்கூடாதா?

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?

சிரிய அகதிக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வயலின்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்