சௌதி கைது செய்த நபர்கள் ராணுவத்தினர் அல்ல மீனவர்கள்: இரான்

  • 20 ஜூன் 2017

வெள்ளிக்கிழமை அன்று சௌதி கடற்படை கைது செய்த மூன்று நபர்கள் ராணுவத்தினர் அல்ல மீனவர்கள் என்று இரான் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கைது செய்யப்பட்டவர்களின் அடையாளம் அறியப்பட்டது , அவர்கள் ராணுவப் பணியாளர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, என எல்லை பிரச்சனைகளுக்கான, இரானின் உள்துறை அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிடிபட்டவர்களின் படகு, கடலுக்குள் இருக்கும் ஒரு எண்ணெய் வயலை அணுகியதால் அவர்களைக் கைது செய்ததாக சௌதி அரேபியா கூறியது. கைதானவர்கள் இரானின் புரட்சி பாதுகாப்பு படை உறுப்பினர்கள் என்றும் அது கூறியது.

பின்னர், சௌதி செய்தி நிறுவனம் எண்ணெய் வயலில் நடக்கவிருந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்:

3 இரான் ராணுவ உயரதிகாரிகளை கைது செய்தது சௌதி ராணுவம்

கத்தாருக்கு 5 விமானங்களில் உணவு அனுப்பியது இரான்

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

150 ஆண்டுகளாக அல்-தானி பரம்பரை கத்தாரை ஆள்வது எப்படி?

பிற செய்திகள்:

திருமணத்திற்கு பின் மினி ஸ்கிர்ட் அணியக்கூடாதா?

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் யார் ?

சிரிய அகதிக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வயலின்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்