அமெரிக்க மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த குடும்பத்தினர் மறுப்பு

  • 21 ஜூன் 2017

வட கொரிய சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இறந்த 22 வயதான அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பயரின் குடும்பத்தினர் அவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA

ஓஹையோவில் உள்ள மரண விசாரணை அதிகாரி வெளிப்புற பரிசோதனைகளை மேற்கொண்டார். ஆனால் மரணத்தின் காரணத்தை பற்றி எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு பிரச்சார பதாகையை திருடியதற்காக ஓட்டோ வார்ம்பர் சிறையிலடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்:

வார்ம்பியர் விவகாரம்: கொடூரமான ஆட்சிமுறை என வடகொரியாவை விமர்சித்த டிரம்ப்

வட கொரியாவை புரிந்து கொள்ள அழைக்கும் ஒரு பிரிட்டிஷ் மாணவர்

15 மாத கால சிறைவாசத்திற்கு பிறகு, வட கொரியா அவரை விடுவித்தபோது ஓட்டோ வார்ம்பர் சுயநினைவு அற்ற நிலையில் (கோமா) இருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மாணவர் வார்ம்பரின் மரணத்திற்காக வட கொரியாவை குற்றம்சாட்டினார். மாணவரின் குடும்பத்தினர் அவர் சிறையில் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார் என்று தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

''1000 லைக்குகள் வேண்டும் இல்லையெனில் குழந்தையை தூக்கி போட்டுவிடுவேன்''

ஈத் பெருநாளை முடிவு செய்வது எவ்வளவு சிக்கலானது?

பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் கும்ப்ளே

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்