பிரஸ்ஸல்ஸ் : தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை

  • 21 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை Getty Images

பிரஸ்ஸல்ஸில் உள்ள சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தற்கொலை குண்டுதாரியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் பெல்ஜிய படையினரால் சுட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிறிய வெடிப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டதை அடுத்து அந்நபர் சுட்டு கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று நம்பப்படுகிறது.

அந்த நபர் இறந்துவிட்டதாக பின்னர் அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை REUTERS/REMY BONNAFFE

இச்சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என்று கருதுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். ஐ எஸ் குழு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

லா லிப்ரெ பெல்ஜீக் என்ற பெல்ஜியன் செய்தித்தாளின்படி, சுட்டுக்கொல்லப்பட்ட நபர் முதுகு பை ஒன்றையும், வெடிகுண்டு பெல்ட் ஒன்றையும் அணிந்திருந்ததாக அரச வழக்கறிஞர்கள் கூறியதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்