இஸ்ரேல் உருவான காலத்தில் தொலைந்துபோன குழந்தைகளின் சோகக்கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இஸ்ரேல் உருவான காலத்தில் தொலைந்துபோன குழந்தைகளின் சோகக்கதை

  • 21 ஜூன் 2017

இஸ்ரேலுக்கு இன்று தேசிய தினம். அதாவது ஏமனில் இருந்து வந்த சிறார் விவகாரத்தை நினைக்கும் தினமும் இதுவே.

அன்று ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போனதாக கூறப்படுகின்றது.

பெரும்பாலும் ஏமனில் இருந்து இடம்பெயர்ந்து, ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து எட்டில் இஸ்ரேல் உருவான போது, அங்கு வந்து சேர்ந்த யூத குடியேறிகளுக்கு சொந்தமான குழந்தைகளே அவை.

ஏமனில் இருந்து வந்த யூதர்களின் குழந்தைகளை ஐரோப்பாவை சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தத்து எடுத்துக்கொண்டாதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அன்று தாம் தொலைத்த குழந்தைகளை சில பெற்றோர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல வேறு குடும்பங்களில் வாழ்ந்த கடத்தப்பட்ட குழந்தைகள் தமது பெற்றோரை தேடி அலைகின்றன.

அன்று காணாமல் போன சில குழந்தைகளையாவது மரபணு சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை தற்போது எழுந்துள்ளது.

பல பெற்றோருக்கு அவர்களது குழந்தைகள் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அவற்றில் பல, ஐரோப்பாவில் இருந்து வந்த யூத தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்பட்டதாக நீண்ட நாட்களாக சந்தேகம் இருக்கிறது.

சில இப்படியான ஏமானிய குழந்தைகளின் மருத்துவ சோதனை ஆதாரங்கள் இஸ்ரேலிய நாடாளுமன்றத்திலும் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டன.

அப்படியான குழந்தைகளின் இன்றைய நிலை குறித்த சோகக் கதை இது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்