நோய்த் தொற்று காரணமாக எடின்பரோ கோமகன் மருத்துவமனையில் அனுமதி

  • 21 ஜூன் 2017

எடின்பரோ கோமகன், இளவரசர் ஃபிலிப், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

ஏற்கெனவே அவருக்கு இருக்கும் ஒரு உடல் நலப்பிரச்சனையிலிருந்து உருவாகியுள்ள நோய்த் தொற்று ஒன்றுக்கான சிகிச்சை மேற்கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இளவரசர் ஃபிலிப், "ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை" என பிபிசிக்கு தெரியவருகிறது; மேலும் அவர் "நலமுடன் இருப்பதாக" அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

96 வயதாகும் எடின்பரோ கோமகன் இந்த இலையுதிர் காலத்தில் தனது அரசக்கடமைகளிலிருந்து ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்திருந்தார். அவரின் அந்த முடிவிற்கு அரசியாரும் ஆதரவு அளித்திருந்தார்.

தனது ராஜாங்க கடமைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ராணி எலிசபெத், இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.

நாடாளுமன்ற துவக்க நிகழ்வு மற்றும் ராயல் அஸ்காட் குதிரைப் பந்தய விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இளவரசர் ஏமாற்றமடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பிபிசி்யின் பிற செய்திகள்:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு

'கருணைக் கொலை செய்துவிடுங்கள்': ராபர்ட் பயஸ் கோரிக்கை

செளதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரை பற்றிய ஐந்து விஷயங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்