ஆஃப்கன் ராணுவ சீருடைக்கு ஊதாரித்தனமாக செலவு: அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2007 ஆம் ஆண்டில் முன்னாள் ஆஃப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் இந்த ஒப்பனை வடிவத்தை தேர்வு செய்ததாக ஜான் கூறியுள்ளார்.

ஆஃப்கன் தேசிய ராணுவத்திற்காக வாங்கப்பட்ட சீருடைகளுக்கு அமெரிக்க பொதுமக்களின் பணம் சுமார் 28 மில்லியன் டாலர்கள் தேவையின்றி செலவழிக்கப்பட்டுள்ளதாக இப்போருக்கான செலவை மேற்பார்வையிடுவதற்கு பணியமர்த்தப்பட்ட அமெரிக்க இன்ஸ்பெக்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

மிகவும் காரசாரமான அறிக்கை ஒன்றில், அதிகாரிகள் காடுகளில் அணிந்தால் தெரியாதிருக்கக்கூடிய வகை வண்ணங்களைக் கொண்ட சீருடைகளை வாங்கியதாகவும், எனினும் ஆஃப்கானின் நிலப்பரப்பில் வெறும் 2.1 சதவீதம் மட்டுமே காடுகள் இருந்ததாகவும் ஜார் சோப்கோ தெரிவித்துள்ளார்.

ஆஃப்கன் சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான வகையில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று இந்த அறிக்கையில் அவர் எழுதியுள்ளார்.

2007 ஆம் ஆண்டில் முன்னாள் ஆஃப்கன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் இந்த ஒப்பனை வடிவத்தை தேர்வு செய்ததாக ஜான் கூறியுள்ளார்.

இந்த 17 பக்க அறிக்கையில், அமெரிக்க ராணுவத்திடம் மிகக்குறைந்த மதிப்புடைய உடை வண்ண வடிவம் (டிசைன்) இருக்கும் நிலையில், ஆஃப்கன் அமைச்சர் அப்துல் ரஹிம் வார்டாக் தனியாருக்கு சொந்தமான உடை வடிவத்தை தேர்வு செய்தார் என்று ஜான் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்காவின் மிக நீண்ட போரான ஆஃப்கன் போரில் நிகழ்த்தப்பட்ட ஊதாரித்தனமான செலவுகளுக்கு, ராணுவ தலைமையகமான பென்டகனை பல ஆண்டுகளாக சோப்கோவின் அலுவலகம் கடுமையாக சாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

வார்டாக் உடன் இணையத்தில் உடை டிசைன்களைத் தேடிய அமெரிக்க அதிகாரிகள், அவர் என்ன பார்த்தாரோ அது அவருக்கு பிடித்திருந்ததால் இதனை வாங்குவதற்கு அங்கீகாரம் அளித்ததாக அதிகாரிகள் அச்சமயத்தில் எழுதியுள்ளனர்.

''என்னுடைய கவலைகள் எல்லாம், பாதுகாப்பு அமைச்சருக்கு பர்பிள் அல்லது பிங்க் நிறங்கள் பிடித்து போயிருந்தால்?'' என்று யு எஸ் ஏ டுடேவுக்கு வழங்கிய பேட்டியில் சோப்கோ கேட்டார்.

''நாம் எந்த கேள்விகளும் கேட்காமல் படையினர்களுக்காக பிங்க் நிற சீருடைகளை வாங்கப் போகிறோமா? இது பைத்தியகாரத்தனம்.

''அந்த சீருடை வடிவம் பாதுகாப்பு அமைச்சருக்கு பிடித்துள்ளது என்ற காரணத்திற்காக, ஃபேஷன் என்ற பெயரில் வரி செலுத்துவோரின் 28 மில்லியன் டாலர்கள் பணத்தை நாம் வீணடித்துள்ளோம்.''

அமெரிக்காவின் மிக நீண்ட போரான ஆஃப்கன் போரில் நிகழ்த்தப்பட்ட ஊதாரித்தனமான செலவுகளுக்கு, ராணுவ தலைமையகமான பென்டகனை பல ஆண்டுகளாக சோப்கோவின் அலுவலகம் கடுமையாக சாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்