“நல்வாழ்வை நாடிப்போய் நரகத்திலிருந்து மீண்டோம்”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“நல்வாழ்வை நாடிப்போய் நரகத்திலிருந்து மீண்டோம்”

  • 22 ஜூன் 2017

பாதுகாப்பான, நல்வாழ்வு தேடி ஐரோப்பாவுக்கு செல்லமுயன்ற நைஜீரியர்கள், இடையில் லிபியாவில் அனுபவித்த கொடுமைகள் நரகத்தைவிட மோசமானவை என்று பிபிசியிடம் தெரிவித்தனர்.

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வெளியேறி ஐரோப்பாவுக்கு வர விரும்பும் அகதிகள் மற்றும் குடியேறிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் கூடி விவாதிக்கிறார்கள்.

ஐரோப்பாவுக்கு செல்லவிரும்பும் ஆப்ரிக்க நாட்டவர்கள் லிபிய வழியாக பயணிக்கிறார்கள்.

ஆனால் போரால் சீர்குலைந்துபோயுள்ள லிபியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. பல்வேறு ஆயுதக்குழுக்களின் பிடியில் சிக்கும் இத்தகைய நூற்றுக்கணக்கான ஆப்ரிக்க குடியேறிகள், லிபியாவின் தற்காலிக சிறைகளில் பணயத்தொகை கேட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டில் நூற்றுக்கணக்கான நைஜீரியர்கள் லிபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

அப்படி திரும்ப வருபவர்கள் தாம் நரகத்தை நேரில் கண்டதாக பிபிசியிடம் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்