பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கான முதல் பிரத்யேக பாஸ்போர்ட் விநியோகம்

  • 23 ஜூன் 2017
Image caption முன்னணி திருநங்கை ஆர்வலர் ஃபர்ஸானா ஜன்

பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கென ஒரு குறிப்பிட்ட அடையாளப் பிரிவுடன் வழங்கப்படும் அந்நாட்டின் முதல் பாஸ்போர்டை தான் பெற்றுள்ளதாக அந்நாட்டின் முன்னணி திருநங்கை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

36 வயதாகும் ஃபர்ஸானா ஜன்னின் பாஸ்போர்டில், ஆண்களுக்கு எம் என்றும், பெண்களுக்கு எஃப் என்று குறிக்கப்படும் இடத்தில் எக்ஸ் என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரியளவிலான திருநங்கை சமூகத்தை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

ஆனால், பரந்தளவிலான பாரபட்சங்களுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, திருநங்கைகளின் எண்ணிக்கையும் முதல்முறையாக தனியாக கணக்கெடுக்கப்பட்டது. இது உட்பட பல நடவடிக்கைகள் சமீப ஆண்டுகளில் திருநங்கைகளின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்