`கர்ப்பமடையும் மாணவிகள் மீண்டும் பள்ளியில் அனுமதியில்லை': அதிபரின் கண்டிப்பால் சர்ச்சை

குழந்தை பெற்ற பள்ளி மாணவிகளை மீண்டும் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி தெரிவித்த கருத்த்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

அதிபர் தன்னுடைய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று ஆன்லைன் புகார் அனுப்பும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு பேரணியில், "கர்ப்பிணியான பின்னர், உங்களுக்கு பள்ளிக்கூடம் என்பது முடிந்துபோன கதை" என்று ஜான் மகுஃபுலி தெரிவித்திருக்கிறார்.

கர்ப்பிணியான பள்ளிச் சிறுமியரை அந்தக் கல்வி நிலையத்தில் இருந்து நீக்குவதற்கு 2002 ஆம் ஆண்டு சட்டம் அனுமதிக்கிறது.

அறநெறி மற்றும் திருமணத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பள்ளியில் இருந்து மாணவிகளை வெளியேற்றலாம் அல்லது விலக்கிவிடலாம் என்று இந்த சட்டம் குறிப்பிடுகிறது. , "பள்ளிக்கு திரும்ப அனுமதித்தால், இளம் தாய்மார்களின் கவனம் திசை திருப்பப்படும்" என்று மகுஃபுலி கூறியிருக்கிறார்.

"சில கணக்குகளை செய்த பின்னர். அவர் வகுப்பறையிலுள்ள ஆசிரியரிடம், "அழுது கொண்டிருக்கும் என்னுடைய குழந்தைக்கு பாலூட்டிவிட்டு வரட்டுமா?" என கேட்பார்" என்று அவர் பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

பள்ளி சிறுமியரை கருவுற செய்யும் ஆணுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும். "இந்த சிறுமியை கருவுற செய்த சக்தியை சிறையில் இருக்கும்போது விவசாயத்தில் காட்டட்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

கர்ப்பிணி சிறுமியை பள்ளியில் இருந்து வெளியேற்றும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் மனித உரிமை நிறுவனங்களையும் தான்சானிய அதிபர் விமர்சித்துள்ளார்.

"இத்தகைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெற்றோருக்காக பள்ளிகளை திறக்க வேண்டும். கர்ப்பிணி மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க அரசை கட்டாயப்படுத்தக் கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.

"உண்மையிலே பள்ளிக்கு சென்று படிக்க விரும்புகிற மாணவ மாணவியருக்கு நான் இலவச கல்வி வழங்கி வருகிறேன். இப்போது நான் பெற்றோருக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிறீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிபரின் கூற்றுக்கு இந்தப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கரவொலி எழுப்பினர் என்று தான்சானியாவிலுள்ள பிபிசி செய்தியாளர் சமி அவாமி தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் பள்ளி சிறுமியர் கர்ப்பிணிகள் ஆவதால் குறைந்தது 8 ஆயிரம் சிறுமியர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

படத்தின் காப்புரிமை DANIEL HAYDUK/AFP/Getty Images

"அறநெறிக்கு எதிரானது"

இவ்வாறு சிறுமியரை பள்ளியில் இருந்து வெளியேற்றுவதற்கு அதிபர் ஆதரவளிப்பது, பல சிறுமியரின் கல்வியை முடிவுக்கு கொண்டு வருவதோடு, பாகுபாட்டை மேலும் வளர்க்கிறது என்று ஆன்லைன் புகார் தெரிவிக்கிறது.

பள்ளிகளில் இருக்கின்றபோது, முன்னதாகவே கருவுறும் நிலையில் இருந்து சிறுமியர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது.

"அவளை திரும்ப அனுமதிப்போம்" (#ArudiShule) என்று பொருள் தரும் ஹேஷ்டாக்கை பயன்படுத்தி தான்சானிய மக்கள் அதிபரின் கூற்றுக்களை டிவிட்டரில் விமர்சித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கிறபோது கர்ப்பிணியாகும் இளம் பெண்களின் நிலைமையை முன்னிலைப்படுத்தியும் பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், இளம் அன்னையருக்கு கல்வி உரிமை மறுக்கப்படக்கூடாது என்று கூறிய தான்சானிய துணை அதிபர் சாமியா சுலுஹூ, அவர்கள் மீண்டும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கென்யாவில் மிகவும் முன்னதாக திருமணம் செய்துகொள்ளும் சிறுமியரை மீட்கின்ற பணியை செய்து வரும், லாபகரமற்ற தொண்டு நிறுவனமான "மாசாய் கல்வி டிஸ்கவரி"யின் செயல் இயக்குநர் கோய்தாமெட் ஒலிகினா, அதிபர் மகுஃபுலியின் கூற்றுகளுக்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

"அதிபர் மகுஃபுலி அறநெறி பாதையில் நின்றால், என்னுடைய கருத்துப்படி, ஒரு வீழ்ச்சியில் இருந்து எழுவதற்கு தான்சானிய பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது இன்னும் ஒழுக்கக்கேடானதாக அமையும். சில வேளைகளில் அவர்களின் கட்டுப்பாட்டில் கூட இல்லாத ஒரு காரியத்திற்காக ஏறக்குறை இரண்டாம் தர குடிமக்களாக அவர்களை தள்ளிவிடுவதை விட நல்ல மனிதராக இருப்போம்," என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

வட கொரியா புதிய ஏவுகணை எஞ்ஜின் சோதனை

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

பி எஸ் எல் வி - சி 38 குறித்த 8 முக்கிய தகவல்கள்

கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை

சீனாவில் தோலை தைத்துக் கொள்ளும் புதிய ஃபேஷன்

திரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்