10 நாட்களில் அல்ஜெசீராவை நிறுத்த கத்தாருக்கு சௌதி நிபந்தனை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

10 நாட்களில் அல்ஜெசீராவை நிறுத்த கத்தாருக்கு சௌதி நிபந்தனை

சௌதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் அதன் அண்டை நாடான கத்தாருக்கும் இடையிலான இராஜீய மோதல் வெள்ளியன்று மேலும் ஒருபடி அதிகரித்துள்ளது.

சௌதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து கத்தாருக்கு 13 நிபந்தனைகளை விதித்திருக்கின்றன.

வளைகுடாநாடுகளின் முன்னணி செய்திச்சேவையாக பார்க்கப்படும் அல்ஜெசீரா தொலைக்காட்சி உள்ளிட்ட அதன் செய்திச்சேவைகள் அனைத்துமே நிறுத்தப்படவேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று.

அடுத்த பத்து நாட்களில் கத்தார் இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே அதன் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்றும் சௌதி தலைமையிலான வளைகுடா நாடுகள் கூறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்:

கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை

கத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் ?

கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?

கத்தார் மீதான தடையும், அதன் பாதிப்பும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்