தேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப்

2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முந்தைய அதிபர் பராக் ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்று ஒபாமா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்கு அறிந்த ஒபாமா, அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படுவது குறித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவார் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை அண்மையில் வெளிவந்துள்ளதை தொடர்ந்து, இக்கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு அந்நாட்டில் உயர் மட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட விவாதப்பொருளாகும்.

அதேவேளையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் மறுத்து வந்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அதிபர் தேர்தலை குலைத்து ஹிலரி கிளிண்டனை தாக்கவும், டிரம்பின் வெற்றிக்கு உதவவும் ரஷ்ய அதிபர் புடின் ஒரு இணையப் பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபட்டதாக ரஷ்ய அரசை சார்ந்த வட்டாரங்கள் ஒபாமாவிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அதிபர் தேர்தலை தான் சூழ்ச்சியுடன் கையாண்டதாக பார்க்கப்படலாம் என்று ஒபாமா கவலைப்பட்டார் என்று இப்பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட கட்டுரை கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய பாதுகாப்பு அமைப்பை சார்ந்த நபர்கள் தங்களுக்குள் நடத்திக்கொண்ட உடனடி சுயபரிசோதனையில் 'அடடா! இதனை நாம் தவறாக கையாண்டு விட்டோமே!' என்ற கருத்து வெளிப்பட்டதாக ஒரு முன்னாள் நிர்வாக அதிகாரி தெரிவித்ததாக மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்