கொலம்பியாவில் படகு மூழ்கி 6 பேர் பலி, 16 பேர் மாயம்

படகின் மேந்தளங்களில் உதவிக்காக காத்திருக்கும் பயணியர் படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption படகு மூழ்கி கொண்டிருந்தபோது, பலரும் அதன் மேல்தளத்திற்கு வந்து உதவிக்காக பொறுமையிழந்து காத்திருந்தனர்

கொலம்பியாவின் வட மேற்கிலுள்ள நீர்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபலமான குவாடேப் ரிசார்ட் நகருக்கு அருகிலுள்ள அல்மிராந்தே என்ற 4 மாடி படகு மூழ்கிய விபத்தில், 133 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 16 பேரை இன்னும் காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption பீதியில் உறைந்திருக்கும் மீட்கப்பட்டோர்

படகில் 170 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த படகு 5 நிமிடங்களுக்குள் நீரில் மூழ்கி விட்டதாக இதனை நேரில் பார்த்தவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption தொடர்ந்து நடந்து வரும் தேடுதல் மற்றும் மீட்புதவி பணிகள்

ஞாயிற்றுக்கிழமை மாலை சம்பவ இடத்தை பார்வையிட்ட கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ், 6 பேர் அந்த சம்பவத்தில் இறந்துள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, அதிகாரிகள் 9 பேர் பலியாகியதாக தெரிவித்திருந்தனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் சான்டோஸ்

20க்கு அதிகமானோர் குவாடேப்பிலுள்ள மருத்துமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்படைய தலைப்புகள்

சமாதான ஒப்பந்தத்தை எட்ட கொம்பிய அரசாங்கமும் ஃபார்க் கிளர்ச்சி அமைப்பும் சம்மதம்

கொலம்பியா அரசுக்கும், ஃபார்க் போராளிகளுக்கும் இடையே இணக்கப்பாடு

கொலம்பியா அமைதி ஒப்பந்தம்: மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுமா?

பிற செய்திகள்

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

''என் துப்பட்டாவிற்குள் ஒளியப் பார்க்கும் சமூகம்''

”எங்கள் மீது பச்சாதாபம் வேண்டாம்”: திருநங்கைகளின் கோரிக்கை

"அரச குடும்பத்திற்கு வெளியே இருக்க விரும்பினேன்": இளவரசர் ஹாரி

"சலவை எந்திரம்" போன்று குலுங்கிய ஏர் ஏசியா விமானம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்