வாரிசுரிமை வழக்கு : ஓவியர் டாலியின் உடலைத் தோண்டியெடுக்க உத்தரவு

  • 26 ஜூன் 2017

வாரிசுரிமை உரிமை கோரி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதையடுத்து, மாதிரிகள் எடுப்பதற்காக பிரபல ஓவியர் சால்வடார் டாலியின் உடலை தோண்டி எடுக்குமாறு மாட்ரிட் நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஓவியர் டாலி

ஓவியர் தன்னுடைய தந்தை என ஸ்பானிஷ் பெண்ணான பிலர் ஆபேல் தெரிவிக்கிறார். 1955-ஆம் ஆண்டு வேலைக்கார பெண்மணி ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக அந்த பெண் கூறுகிறார்.

வாரிசு உரிமை சோதனையில் பயன்படுத்தும் வகையில் ஓவியர் டாலியினால் பயன்படுத்தப்பட்ட எந்த உயிரியல் மாதிரிகளோ, சொந்தப் பொருட்களோ மிஞ்சியிருக்கவில்லை என்பதால் அவரின் உடலை தோண்டி எடுத்து மாதிரிகளை சேகரிக்க உத்தரவிட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

'சர்ரியலிசம் ' பாணி ஓவியக் கலைஞரான அவர், தனது 85-வது வயதில் ஸ்பெயினில் காலமானார். அவரது சொந்த ஊரான ஸ்பெயினின் வடகிழக்கு கடலோனியா பிராந்தியத்தில் அமைந்துள்ள பிகுரெஸ் என்ற நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

கிரோனாவில் பிறந்த , டாரட் அட்டை ( ஒரு வகை ஜோசியம்) பார்த்து ஆருடம் சொல்பவரான மரியா பிலார் ஆபேல் மார்ட்டினெஸ், கடந்த 2015-ஆம் ஆண்டு முதன் முறையாக வாரிசுரிமை குறித்த சர்ச்சையை கிளப்பினார்.

படத்தின் காப்புரிமை AFP/EPA

காடாகுவெஸ் நகரில் இருந்த போது , டாலியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த ஒரு குடும்பத்திடம் தனது தாய் வேலை செய்தார் என அந்த பெண் தெரிவித்ததாக `எல் பேய்ஸ்` செய்தித்தாள் கூறுகிறது.

அந்த சமயத்தில் ஓவியர் டாலி, காலா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை.

இது குறித்து காலா டாலி அறக்கட்டளை பதில் ஏதும் அளிக்கவில்லை.

பிற செய்திகள்:

”எங்கள் மீது பச்சாதாபம் வேண்டாம்”: திருநங்கைகளின் கோரிக்கை

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

மசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்

சாமுராய் வாள் எப்படி உருவாகிறது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்