மோடி- டிரம்ப் சந்திப்பு: ஆண்டுக்கு 50,000 இந்தியர்கள் பயனடைவார்களா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோடி- டிரம்ப் சந்திப்பு: ஆண்டுக்கு 50,000 இந்தியர்கள் பயனடைவார்களா?

  • 26 ஜூன் 2017

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் முதல்முறையாக இன்று திங்கட்கிழமை சந்திக்கிறார்.

இருவருமே அவரவர் நாட்டில் வலிமையான தலைவர்கள். தீவிரமாக தேசியவாதம் பேசுபவர்கள். இருவரையும் மூன்றுகோடி பேர் டுவிட்டரில் பின் தொடருகிறார்கள்.

ஆனாலும் இவர்கள் உறவில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

குறிப்பாக அமெரிக்காவுக்கு H1B Visa மூலம் பணிபுரியச்செல்லும் இந்திய தொழில்நுட்பத்துறையினரின் எண்ணிக்கை குறித்து இவர்களின் சந்திப்பில் பேசப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த H1B Visa கீழ் ஆண்டுக்கு 65,000 பேர் அமெரிக்காவுக்குள் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். அதில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள். இந்திய தொழில்நுட்பத் துறையின் வருமானத்துக்கு அமெரிக்காவின் H1B Visa முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்க வேலைகள் அமெரிக்கர்களுக்கே என்கிற கோஷத்தை தொடர்ந்து வலியுறுத்திய டொனால்ட் ட்ரம்ப், இந்த H1B Visaவை கட்டுப்படுத்தப்போவதாகவும் கூறியிருந்தார்.

இந்த பின்னணியில் மோடி ட்ரம்ப் இடையிலான சந்திப்பு கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்