அமெரிக்காவின் அமைதியான ரயில் பாதைகள்

படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption ஓகோமாவில் இருந்து மேற்கில் உள்ள தெற்கு டகோடா

ஜான் சாண்டெர்சனின் ஆரம்ப கால நினைவுகளில் ஒன்று , நியுயார்க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள அவரது வீட்டிலிருந்து குடும்பத்துடன் பென்சில்வேனியாவுக்கு செல்லும் சாலை பயணங்கள் பற்றியது.

அவரது பயணங்களில் ஒரு முறை, தனது 13 வயதில்,ஜான் சண்டெர்சன் புகைப்படங்கள் எடுப்பதில் தனக்குள்ள விருப்பத்தை கண்டறிந்தார்.

அப்போது அவர் ஸ்ட்ராஸ்பர்க் ரயில் சாலை மற்றும் அதன் வரலாற்றுப் புகழ் பெற்ற நீராவி இயந்திரத்தை படம் பிடித்தார்.

தனக்கு வயது வந்தபோது, சாண்டெர்சன் ரயில்களை மையமாக கொண்டு எடுத்த படங்களில், தனது இளம் வயதில் எடுத்த படங்களுக்கு மாறாக, அவர் அமெரிக்காவில் ரயில்கள் இல்லாத ரயில் பாதைகளை படம்பிடித்தார்.

படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption நியூயார்க்கில், ஹட்சன் நதியில் அமைந்துள்ள நியூ வின்ட்சர் எரிபொருள் மாற்றும் நிலையம்
படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption இந்தியானாவில் வாக்கர்டனில் உள்ள டயமண்ட் க்ராஸிங் கோபுரம்
படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption நியூயார்க் நகரத்தில் ஸ்டோனி பாயிண்ட்டில் ஒரு அதிகாலை காலை நேரம்

ரயில் பாதையில் ரயில் தற்காலிகமாக இருப்பதைக் காட்டுவதைக் காட்டிலும், இந்த படங்கள் கட்டிடக்கலை மற்றும் ரயில் பாதை அமைந்துள்ள சுற்றுச்சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொள்வதற்கு அனுமதிக்கும் என்று அவர் நம்புகிறார்.

''ரயில் பாதை அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சுற்றுச் சூழல் பகுதிக்கும் உள்ள நெருக்கம் போன்றவைதான் அமெரிக்காவின் தேசிய தன்மையை தெரிந்துகொள்வதற்காக சரியான வழி என்று நான் பின்னர் கண்டறிந்தேன்,'' என்றார்.

படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption மேற்கு வர்ஜீனியாவில் மார்டின்ஸ்பர்க்கில் உள்ள என் ஏ கோபுரம்
படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption நியூ ஜெர்சியை சேர்ந்த ஹெல்மெட்டாவில் உள்ள ஹெல்மே ஸ்நப் மில் பகுதி
படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption ஓஹியோவில் உள்ள முக்கிய நகரமான கீளீவ்லேண்ட்டில் உள்ள ஸ்டீல் மில் நிலப்பரப்பு

இந்த புகைப்படங்கள், நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புற சூழல், மிக உயர்ந்த மலைத் தொடரிலிருந்து மிகச் சிறிய நகரங்கள் என அனைத்தையும் படம்பிடிக்கின்றன.

கிழக்கிலிருந்து மேற்கு மாநிலங்கள் வரை பரந்து விரிந்துள்ள இந்த நிலப்பரப்பில், உயரமான கட்டிடங்களில் இருந்து தானிய குழிகள் மற்றும் திறந்த வெளிகள் என காட்சிகள் வேறுபடுகின்றன.

படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption ஓஹியோவில் கொலம்பஸின் புறநகர் பகுதி
படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption தெற்கு டகோடாவில் வைட்லேக் என்று அறியப்படும் ஏரி அருகே உள்ள கிடங்கு

பிறபுகைப்பட தொகுப்புகள்:

இந்திய பழங்குடி இனத்தில் தொடரும் குழந்தை திருமணம் (புகைப்படத் தொகுப்பு)

ஈத் பெருநாள் கொண்டாட்டங்கள்: புகைப்படத் தொகுப்பு

யோகாசன பயிற்சிகளில் மத்திய அமைச்சர்கள் (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption ஓகோமாவில் இருந்து மேற்கில் உள்ள தெற்கு டகோடா

பொதுவாக எடுக்கப்படும், ரயில்பாதைகள் மறையும் புள்ளியை சண்டெர்சன் எடுக்கவில்லை. மாறாக, அவர் ரயில்பாதைகள் அருகே நேராக அமைந்துள்ள கட்டிடங்களை அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்பட திட்டம் அடுத்த கடன்களை எட்டும்போது, இந்த கோணத்தில் படம் எடுப்பது சரி என தோன்றியது. ஏனெனில், இந்த இடத்தில் பல கட்டிடங்கள் ரயில்பாதை அருகில் உள்ள சாலைபகுதியில் சீரமைப்பு செய்யப்பட்டு பின்னர் அமைக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள பார்க் அவென்யூ டன்னல் கட் என்ற பகுதி
படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption கோலிங் டவர், மரியன், ஓஹியோ
படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption வயோமிங்கில் உள்ள மெடிசின் பௌ பகுதியில் புயல்காற்று வீசும் சமயம்

இதுவரை அதிகப்படியாக பதிவு செய்யப்பட்ட அமெரிக்க சாலைகளுக்கு எதிராக, இந்த ரயில்பாதைகளில் காணப்படும் அமைதியை அவர் பாராட்டினார்.

''100 பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் இந்த வழியாக வரும்வரை'' இதுபோன்ற படங்களை எடுக்கமுடியும்.

படத்தின் காப்புரிமை John Sanderson
Image caption நியூ ஜெர்சியிலுள்ள கெர்னியில் இருந்து மன்ஹாட்டன் தெரியும் காட்சி

பிற செய்திகள்:

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

தாயுமானவர்களா தந்தையர் ?

இலங்கை : நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்