டிரம்பின் பயணத்தடைக்கு உச்சநீதிமன்றம் பாதி அனுமதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் பயணத்தடைக்கு உச்சநீதிமன்றம் பாதி அனுமதி

தனது சர்ச்சைக்குரிய பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை அனுமதிப்பதாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதை தடைசெய்யும் உத்தரவின் ஒரு பகுதியை அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.

அந்த உத்தரவின் சில பகுதிகளை உடனடியாக நிறைவேற்றலாமென உச்சசநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கர்களுடனோ, அமெரிக்க அமைப்பு அல்லது நிறுவனங்களுடனோ நியாயமான தொடர்பு இல்லாவிட்டால் அவர்கள் அமெரிக்காவுக்குள் வர முடியாது.

அதேசமயம் டிரம்பின் உத்தரவு அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அதை எதிர்த்து தொடர்ந்து போராடப்போவதாக அறிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்