பிரம்மாண்ட போர்க்கப்பல் கடலுக்குள் இறக்கப்பட்டது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரம்மாண்ட போர்க்கப்பல் கடலுக்குள் இறக்கப்பட்டது

போர்விமானங்களைத் தாங்கும் பிரிட்டன் கடற்படையின் பிரம்மாண்ட போர்க்கப்பல் முதல்தடவையாக கடலில் இறக்கப்பட்டுள்ளது.

அறுபத்தையாயிரம் டன் எடைகொண்ட HMS Queen Elizabeth என்கிற இந்த போர்க்கப்பல், அது கட்டப்பட்ட ஸ்காட்லாந்தின் ரோசித் துறையில் இருந்து சோதனை ஓட்டமாக ஆறு வாரங்கள் கடலில் பயணிக்கவுள்ளது.

பல ஆண்டுகளாக பிரிட்டனில் கட்டமைக்கப்பட்ட, தொழில்நுட்பரீதியில் மிகவும் சிக்கலான இந்த திட்டத்துக்கு 380 கோடி அமெரிக்க டாலர் செலவானது.

300 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல், கட்டுமான தளத்திலிருந்து மிக கவனமாக பதினோறு சரக்குப்படகுகள் உதவியுடன் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.

செல்லும் வழியில் இருக்கும் பல பாலங்களை கடப்பதற்காக இது தன் உயரமான கொடிமரத்தை கீழிறக்க வேண்டி வந்தது.

எல்லாம் முடிந்து இது கடலுக்குள் சென்று சேர்ந்துள்ள இந்த கப்பலின் முழுமையான செயற்திறன் பரிசோதிக்கப்படவிருக்கிறது.

திட்டமிட்டபடி எல்லா பரிசோதனைகளும் கட்டுமானங்களும் முடிக்கப்பட்டால் இந்த ஆண்டின் இறுதியில் அது தன் புதிய வீடான போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் குடியேறும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்