விண்ணிலிருந்து உலகின் எல்லா மூலை முடுக்குக்கும் இணைய வசதி: பிரான்ஸ் திட்டம்

விண்வெளியிலிருந்து உலகின் ஒவ்வொரு மூலைக்கும் இணைய வசதியை வழங்கும் ஒரு லட்சிய திட்டத்தில் பிரான்ஸ் வேலைகளைத் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

செயற்கைக்கோள்களின் கூட்டம் என்று அவர்கள் குறிப்பிடும் திட்டத்தை, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஏர்பஸ், மற்றும் அதன் கூட்டாளி நிறுவனமான ஒன் வெப் ஆகிய நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

அவை குறைந்தபட்சம் 600 செயற்கைக்கோள்களை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர்.

அவற்றை ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையில் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்கிறார்கள்.

2021க்குள் அவற்றை விண்வெளிக்கு அனுப்பும் போது, அது வரலாற்றில் பெரிய ராக்கெட் ஏவும் நிகழ்வாக அமையும். அதன்படி ரஷ்யாவின் சோயூஸ் ராக்கெட் மூலம் ஒவ்வொரு சில வாரங்களும் செயற்கைக்கோள்களின் தொகுப்புக்கள் அனுப்பப்படும்.

பிற செய்திகள்:

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

தாயுமானவர்களா தந்தையர் ?

இலங்கை : நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்