வெனிசுவேலா அதிபர் மீதான கோபத்தில் உச்ச நீதிமன்றம் மீது குண்டு வீசிய போலீஸ் அதிகாரி

படத்தின் காப்புரிமை INSTAGRAM
Image caption ஆஸ்கர் பெரெஸ் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றம் மீது ஹெலிகாப்டர் ஒன்றிலிருந்து துப்பாக்கிச்சூடு மற்றும் கையெறி குண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அழைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், காவல்துறை ஹெலிகாப்டர் ஒன்று, துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிப்பு சத்தம் கேட்பதற்குமுன், நகரத்தை சுற்றி வட்டமிட்டிருந்தபடி இருந்த காட்சிகள் வெளியாயின.

ஹெலிகாப்டரை ஓட்டியதாகக் கருதப்படும் போலீஸ் அதிகாரி ஒருவர், தான் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் அரசாங்கத்தைக் குற்றம் புரிந்த அரசு என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption தன்னுடைய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை அதிபர் மதுரோ எதிர்கொண்டு வருகிறார்.

வெனிசுவேலாவில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்துவரும் நிலையில் அதிபர் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதிபர் மதுரோவின் ஆட்சி மீதான அதிகாரத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாகக் கூறி வெனிசுவேலாவில் உள்ள எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அடிக்கடி விமர்சித்து வந்துள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்