கலாசார உடையணிந்து வந்த பெண்ணை பணிப்பெண் என வெளியேற்றிய கோல்ஃப் கிளப்

பழங்குடியின ஆடையணிந்து வந்த பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லில்லி கோல்ஃப் கிளப்பில்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இச் சம்பவத்துக்கு, கோல்ஃப் மைதான நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மேகாலயாவின் பாரம்பரிய `காசி பழங்குடியின உடையை அணிந்திருந்த அப்பெண், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளருடன் , டெல்லி கோல்ஃப் கிளப்புக்கு வந்திருந்தார்.

``பணிப்பெண் போல தோற்றமளித்தார்`` என்று கூறி , தைலின் லிங்டோ என்ற அந்தப் பெண்ணை, கிளப்பில் இருந்து வெளியேறுமாறு அதன் ஊழியர் ஒருவர் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டெல்லி கோல்ஃப் கிளப் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "இந்த சம்பவத்தை இன்னும் சரியான முறையில் ஊழியர்கள் கையாண்டிருக்கலாம். அந்தப் பெண்ணை அழைத்திருந்த கிளப்பின் உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்ட நிபந்தனையற்ற மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது.

கிளப்புக்குள் அனுமதி மறுக்கப்பட்ட தைலின் லிங்க்டோ, டாக்டர் நிவேதிதா பர்தகுர் சோந்தி என்பவரின் குழந்தைகள் பராமரிப்பாளராக (கவர்னெஸ்) உள்ளார்.

கோல்ஃப் கிளப்பின் உறுப்பினர் ஒருவர் விடுத்த அழைப்பின்பேரில், நிவேதிதா பர்தகுர் சோந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளப்புக்கு சென்றிருந்தார்.

இந்த சம்பவம் பற்றி அவர், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தாங்கள் கிளப்புக்கு வந்த 10- 15 நிமிடங்களுக்குள், கிளப்பின் நிர்வாகி, அஜித் பால், ஒரு பெண்ணுடன் வந்து, லிங்டோவை அவர் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்தும் , அறையிலிருந்தும் வெளியேறுமாறு கோரினார். ஏன் வெளியேறும்படி கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அந்த பெண் பார்ப்பதற்கு நேபாளி போல உள்ளார் என்றும் அவர் அணிந்துள்ள பாரம்பரிய ஆடையை பார்த்தால் அவர் பணிப்பெண் போல தோற்றம் அளிக்கிறார் என்றார்; இது மிகவும் அவமானப்படுத்துவதாக இருந்தது. இத்தகைய பாரபட்சத்தை ஏற்றுக்கொள்ள முடியாது`` என்று கூறினார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, டெல்லி கோல்ஃப் மைதான நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இதையும் படிக்கலாம்:

பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்'

சிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்வு

"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

பால் கலப்பட சர்ச்சை: குற்றச்சாட்டுகள் உண்டு, நடவடிக்கைகள் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்