இந்திய தம்பதி வெள்ளையின குழந்தையை தத்தெடுக்கத் தடை?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய வம்சாவளியினர் வெள்ளையின குழந்தையை தத்தெடுக்கத் தடை?

பிரிட்டனைச்சேர்ந்த சீக்கிய தம்பதி, உள்ளூர் குழந்தையை தத்தெடுக்க முயன்றபோது அவர்களின் உள்ளூராட்சி சபை அதற்கு அனுமதிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவியான சந்தீப் மற்றும் ரீனா மாந்தர் இருவருமே பிரிட்டனில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்திய வம்சாவளியில் வந்த சீக்கியர்கள்.

ஆயினும் அவர்களின் இந்திய கலாச்சார மரபு காரணமாக உள்ளூர் குழந்தைகளை தத்தெடுக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லையென அவர்கள் புகார் கூறுகின்றனர்.

குழந்தைகளை தத்துக்கொடுக்கும்போது குழந்தையின் இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்கே தத்துக்கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்கிற மரபு இருந்தாலும், வேற்றின பெற்றோருக்கு தத்து கொடுப்பதற்கு சட்டப்படி எந்த தடையும் இல்லை என்று அரசின் விதிகள் கூறுகின்றன.

உள்ளூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக இந்த தம்பதி வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்