பாரிஸில் மசூதிக்கு வெளியே வாகனம் ஓட்டி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒருவர் கைது

பாரிஸ் நகரில் மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்திற்குள் வாகனம் ஓட்டியதற்காக ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:30மணிக்கு(இந்திய, இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு) க்ரீட்டல் புறநகர் பகுதியில் நடந்தது . இதில் யாரும் காயமடையவில்லை.

பள்ளிவாசலை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள தடைகளால் அந்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

அந்த நபரின் நோக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அவர் ஆர்மீனிய இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர் பாரிசில் நடந்த இஸ்லாமியவாத-தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க விரும்புவதாகவும் கூறினார் என்று லே பாரிஸ்யன் நாளிதழ் கூறுகின்றது.

ஐரோப்பா கடந்த ஆண்டு பல வாகனத் தாக்குதல்களை கண்டிருக்கிறது, அந்த சம்பவங்களில் ஈடுட்டவர்கள் பலர் இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளவார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்:

அந்த சந்தேக நபரின் வாகனம், ஃபிரான்ஸ் தலைநகரின் தென்கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் மீது தொடர்ச்சியாக மோதித் தாக்கியதாக காவல்துறையின் அறிக்கை கூறுகின்றது.

அதன் பிறகு அங்கிருந்து அந்தக் கார் வேகமாக சென்றது ஆனால் மீண்டும் தடுப்புகளில் மோதியது. அங்கிருந்து தப்பியோடிய அந்த நபரை, சிறிது நேரத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் மது அல்லது போதை பொருளைப் பயன்படுத்தியதால் அத்தகைய செயலில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என்று லே பாரிஸ்யன் நாளிதழ் கூறுகின்றது.

பாடக்லன் தியேட்டர் மற்றும் சேம்ப்ஸ்-எலிசீஸ் நடத்தப்பட்ட தாக்குதல்களுர்ரு ஐஎஸ் அமைப்பு காரணமாகக் கூறப்படும் நிலையில், அதற்குப் பழிவாங்க விரும்பியதாக அந்த நபர் கூறியுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தலைநகர் பிரான்ஸில் பாட்லகன் தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் நடந்த தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்தனர். அப்போது முதல் பிரான்ஸில் அவசர நிலை அமலில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரு துப்பாக்கிதாரி சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர், சேம்ப்ஸ்-எலிசீஸில் காவல்துறை அதிகாரி சேவியர் ஜூஜெலை சுட்டுக்கொன்றார். அவரது உடலுக்கு அருகில் ஐஎஸ் அமைப்பை ஆதரிப்பதாக கூறும் குறிப்பு ஒன்றும் கிடந்தது.

பிற செய்திகள் :

ஆறு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமலாகியது

தேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக்

யு டியூபில் பிரபலமாக நினைத்து விபரீத செயலில் ஈடுபட்ட அமெரிக்க தம்பதியர்

ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்

மீண்டும் கன்னிப்பெண்களாக மாற விரும்பும் துனீசிய பெண்கள்

திரை விமர்சனம் : இவன் தந்திரன்

வத்திகான் வாசலுக்கு வந்திருக்கும் பாலியல் துஷ்பிரயோக வழக்கு:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வத்திகான் வாசலுக்கு வந்திருக்கும் பாலியல் துஷ்பிரயோக வழக்கு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்