ஒருபாலுறவுக்காரர்கள் திருமணத்துக்கு ஜெர்மனி அனுமதி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது

ஒருபாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதை சட்டப்பூர்வமாக்குவதை ஆதரித்து பெரும்பாலான ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒருபாலுறவுக்காரர்களுக்கிடையே திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்துவதற்கு, ஜெர்மனி சான்லர் ஏங்கெலா மெர்க்கல் தன்னுடைய எதிர்ப்பை கைவிட்ட சில நாட்களுக்கு பின்னர் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சீர்திருத்தம் முழு சிவில் திருமண உரிமைகளையும் ஒருபாலுறவுக்கார தம்பதியருக்கு வழங்குகிறது. குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதிக்கிறது.

மெர்க்கலின் அரசியல் எதிரணிகள் இதனை வலுவாக ஆதரித்தன. ஆனால், சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்த சான்சலர் மெர்க்கல், இதற்கு எதிராக வாக்களித்துள்ளார்.

Image caption சுதந்திரமான வாக்கெடுப்புக்கு அனுமதித்த ஏங்கெலா மெர்க்கல் ஒருபாலுறவுகாரர்களுக்கு இடையில் நடைபெறும் திருமணத்திற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்த மசோதாவை ஆதரித்து 393 பேரும், எதிர்த்து 226 பேரும் வாக்களித்தனர். 4 பேர் வாக்களிக்கவில்லை.

திருமணம் என்பது வாழ்க்கை முழுமைக்கும் வேறுபட்ட அல்லது ஒரே பாலினத்தவரால் செய்துகொள்ளப்படுவதாகும் என்று ஜெர்மனி சட்டத்தில் இடம்பெறும் என்று எஃஎப்ஃபி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்புக்கு பின்னர், தன்னுடைய திருமணம் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடைபெற்றது என்று ஏங்கெலா மெர்க்கல் தெரிவித்தார். ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்றியிருப்பது சமூக ஒற்றுமையையும், அமைதியையும் கொண்டுவர உதவும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

பிரிட்டனில் வரலாற்று ரீதியில் ஒருபாலுறவு ஆண்களுக்கு மன்னிப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரிட்டனில் வரலாற்று ரீதியில் ஒருபாலுறவு ஆண்களுக்கு மன்னிப்பு

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்