ஜி.எஸ்.டியால் விலை உயரும் உயிர்காக்கும் மருந்துகள் - சிறு நகரங்கள், கிராமங்களில் தட்டுப்பாடு அபாயம்

மருந்து படத்தின் காப்புரிமை Getty Images

2017 ஜூலை முதல் தேதியில் இருந்து ஜி.எஸ்.டி வரி முறைமை அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தம் என அழைக்கப்படும் புதிய சரக்கு மற்றும் சேவை வரியானது நாடு முழுவதும் ஒரேவிதமான வரிவிதிப்பை உறுதிப்படுத்தும் என்று உறுதியளிக்கிறது. இந்த புதிய ஜி.எஸ்.டியால் எதிர்காலத்தில் மருந்துகளின் விலை உயரும்.

மருந்துகளின் விலை சுமார் 2.3 சதவிகித அளவுக்கு அதிகரிக்கும் என்று இந்திய மருந்து உற்பத்தியாளர் கூட்டமைப்பு (ஐ.டி.எம்.ஏ) தலைவர் தாரா படேல் சொல்கிறார்.

விலை உயரும் மருந்துகளில் பல உயிர்காக்கும் மருந்துகளும் அடங்கும். இருந்தபோதிலும் சில உயிர் காக்கும் மருந்துகளுக்கான வரி, ஐந்து சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

நிறுவனங்களுக்கு சுமை

பிபிசியிடம் பேசிய தாரா படேல், ஜி.எஸ்.டிக்கு மருந்துத் துறை தயாராகிவிட்டதாகவும், மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்றும் கூறினார்.

எனினும், விநியோகஸ்தர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள சரக்குகள் குறித்த விவரங்களை ஜி.எஸ்.டிக்காக இன்னமும் பதிவு செய்யவில்லை.

"எனவே, ஐ.டி.எம்.ஏ செய்திருக்கும் முடிவின்படி, அரசின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரியை மருந்து நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும். மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் அதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டன."

தொடர்புடைய செய்திகள்

வரி அதிகரிப்பிற்கு ஏற்ப, மருந்துகளின் விலையையும் அதிகரிக்கும் கோரிக்கையை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அரசிடம் வைத்தன. ஆனால் விலைக் கட்டுப்பாடு கொண்ட மருந்துகளுக்கு மட்டுமே விலையை உயர்த்த அரசு அனுமதியளித்துள்ளது.

தற்போது மருந்துகள் மீதான 9 சதவிகித வரி, ஜி.எஸ்.டிக்கு பிறகு 12 சதவிகிதமாக உயர்ந்துவிடும்.

படத்தின் காப்புரிமை Getty Images

சிறிய நகரங்களில் பற்றாக்குறை ஏற்படலாம்

"அதிகரிக்கும் வரிக்கு ஏற்ப மருந்துகளின் விலையை உயர்த்த அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பதால், விலைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது" என்று ராஜஸ்தான் மருந்து தயாரிப்பாளர் கூட்டமைப்பின் தலைவர் சுபாஷ் மல்ஹோத்ரா கூறுகிறார்.

மருந்துகளை சில்லறை விற்பனை செய்வதில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிற செய்திகள்

'ஸ்டாக்கிஸ்டுகள் தங்களிடம் இருக்கும் மருந்துகளின் இருப்பு குறித்த விவரங்களை பதிவு செய்யும் வரை, சிறிய நகரங்கள், கிராமங்களில் இருக்கும் சில்லறை விற்பனை கடைகளுக்கு, அவர்களால் மருந்து விநியோகம் செய்யமுடியாமல் போகலாம்' என்று சுபாஷ் மல்ஹோத்ரா கூறுகிறார். இதனால் சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.

மல்ஹோத்ராவின் கணிப்பின்படி, மிக குறைந்த அளவிலான மருந்துகளுக்கு மட்டுமே அரசு ஐந்து சதவிகித வரியை அறிவித்துள்ளது. "இருந்தாலும் இந்த மருந்துகளின் விலையில் நான்கு சதவிகிதம் வரை வரி குறைந்திருக்கிறது நல்லதுதானே."

ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜி.எஸ்.டி வரி என்றால் என்ன? (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்