நீண்டகால நோய்களுக்கு இலவச மருந்து பரிந்துரைச்சீட்டு கொடுக்கலாமா?

மாத்திரை சாப்பிடும் பெண் படத்தின் காப்புரிமை Getty Images

மருத்துகளுக்காக செலவு செய்யமுடியாததால் சிலர் மருத்துவமனைக்கு செல்வதையே நிறுத்திவிடுகின்றனர்

நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவோருக்கு இலவச மருந்து சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்தின் மருத்துவ பரிந்துரைப்புக் கட்டணத்திற்கான கூட்டணி பிரசாரக் குழு கூறுகிறது.

மருத்திற்கு செலவிட முடியாத நிலையில் இருக்கும் பலர் மருத்துவமனைக்கு செல்வதையே நிறுத்திவிடுவதாக அந்தப் பிரசாரக் குழு கூறுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தடுப்புமருந்தில் புதுப்புரட்சி: ஊசிக்குபதில் பிளாஸ்டர்

இலவச மருந்துகள் தேவைப்படும் குறிப்பிட்ட நோய்களின் பட்டியலில் பர்கின்சன் போன்ற பிரத்யேக தன்மை கொண்ட நோய்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பிரசாரக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.

ஆனால், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு குறைந்த செலவில் மருந்துக்கான பரிந்துரை சீட்டுகளை வழங்குவது உறுதி செய்யபட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Manjunath Kiran/AFP/GettyImages

பூலேவைச் சேர்ந்த ஜோ ஓக்லே, ஒரு பேருந்து ஓட்டுனர், இரு குழந்தைகளின் தாய், இவரும் இலவச மருத்துவ வசதிகளைக் கோரும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவர்.

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஓக்லே, மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் இரத்த அழுத்த நோயும் இருக்கும். அவருக்கு சிறுநீரகங்களைக் காக்கும் மருந்துகளின் செலவுகள் அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்.

"என்னுடைய மருத்துவச் செலவுகளை செலுத்த முடியாமல் இரு முறை நான் மருத்துவச் சீட்டை பெறவில்லை. பணம் கிடைத்த பிறகுதான், மருந்துச் சீட்டை பெறவேண்டும் என்று இருந்துவிட்டேன்" என்று அவர் சொல்கிறார்.

"மருந்துகளை எடுத்துக் கொள்ளாத அடுத்த நாள் காலையில் விழித்து எழுந்தபோது, மிகவும் மோசமாக உணர்ந்தேன், ஹேங்ஓவரால் மோசமாக பாதிக்கப்பட்டது போல் இருந்தது."

"தாங்கமுடியாத தலைவலி இருந்தது. அன்று ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகிவிட்டது, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன்."

கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கொலெஸ்ட்ராலைக் குறைக்கும் புதிய தடுப்பு மருந்து

"முதன்முறையாக எனக்கு முதுகெலும்பில் துளைபோடப்பட்டது, என் மூளையில் ரத்தக் கசிவு இல்லை என்பதை எம்.ஆர்.ஐ ஸ்கேன் உறுதிப்படுத்தியது."

"என்னுடைய மருந்துச்சீட்டுக்கான விலையைவிட, தேசிய சுகாதார சேவைக்கான (என்.எச்.எஸ்) செலவு குறைந்தது என்று சொல்லமுடியாது"

"புதிய சிறுநீரகத்தை பெறுவதற்கான பட்டியலில் நான் இருக்கிறேன், சிறுநீரகம் கிடைப்பது உறுதியாகிவிட்டால், பொருத்தப்படும் சிறுநீரகத்தை உடல் எதிர்க்காமல் இருப்பதற்கான மருந்துகளுக்கான செலவுகளை நான் கொடுக்கவேண்டும். அது சரியானதாக தோன்றவில்லை".

அண்மை ஆண்டுகளில், மருந்துகளுக்கான பரிந்துரைச் சீட்டுக்கான கட்டணங்களை வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாண்டு ஆகியவை ரத்து செய்துவிட்டன.

இங்கிலாந்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 16 வயதுக்கு குறைவானவர்கள், கர்ப்பிணிகள், மிகவும் குறைவான வருமானம் உடையவர்களுக்கு இலவச மருந்துச் சீட்டு வழங்கப்படுகிறது.

ஆனால், 10% க்கு தான் இந்தச் சலுகை கிடைப்பதாகவும், சுமாரான ஊதியம் பெறும் நீண்டகாலம் மருந்து பயன்படுத்துவோருக்கு தற்போதைய பட்டியலில் விலக்கு இல்லை என்று இந்த பிரசாரக் குழு கூறுகிறது.

'காலவதியானவை'

படத்தின் காப்புரிமை Getty Images

இதனால் இங்கிலாந்தில் இருக்கும் பல அமைப்புகள் இந்த பட்டியல் "நியாயமற்றது, காலாவதியானது" என்று குற்றம் சாட்டுகின்றன.

"நீண்டகால நோய்களான எச்.ஐ.வி, ஆஸ்துமா, விழி வெண்படலம் போன்ற நோய்களைக் கொண்டவர்கள், ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், மருந்துச் சீட்டுகளுக்காக பணம் செலுத்தவேண்டும் என்பது அவர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சிக்கல். "

"நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கு மருந்துச்சீட்டுகளுக்கு பணம் செலுத்துவது என்பது பெரும் சுமையாக இருக்கும். சில நேரங்களில் மருந்துச் சீட்டுகளுக்கு பணம் செலுத்த முடியாதவர்கள் தேசிய சுகாதார திட்டத்தின் பயனை பெறுவதற்காக மருத்துவமனைகளில் சேர்ந்து, மருத்துவமனைகளில் நேரத்தையும், அவர்களின் விடுமுறையையும் வீணடிக்கிறார்கள்".

தொடர்புடைய செய்திகள்

இதற்கிடையில், " நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருந்துச் சீட்டுகளை தருவதை உறுதி செய்திருக்கிறோம்" என்று மருத்துவத் துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

"அதனால்தான் பல்வேறு மருந்து பரிந்துரைச் சீட்டுகளுக்கு (பிரிஸ்க்ரிப்சன்) கட்டண விலக்கு வழங்கப்படுகிறது. மேலும், இங்கிலாந்து தேசிய சுகாதாரத் திட்டத்தில் 90% நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது."

எந்த மருந்துகள் இலவச மருந்துச் சீட்டுப் பெற தகுதியுள்ளவை?

1968 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்டது "மருத்துவத்திற்கான விதிவிலக்குகள்" பட்டியல். பல்வேறு குறிப்பிட்ட மற்றும் சில நேரங்களில் அரிதான மருத்துவ நிலைமைகளை இந்த பட்டியல் உள்ளடக்கியிருக்கிறது. அண்மைக்காலத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சை மட்டுமே இந்தப் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரசாரகர்கள் என்ன சொல்கிறார்கள்?

கடந்த 50 ஆண்டுகளில் மக்களை பாதிக்கும் நீண்ட கால நோய்களின் நிலைமையில் பலவிதமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறும் பிரச்சாரகர்கள் இந்தப் பட்டியல் தற்போதைய யதார்த்த நிலைமையை பிரதிபலிக்கவில்லை என்கின்றனர்.

பிற செய்திகள்

மருந்துகள் வாங்குவதற்கான பரிந்துரைச் சீட்டுகளை பெறுவதற்கு பணம் இல்லாதவர்கள் மருந்துகள் சாப்பிடுவதை இடைநிறுத்தி விடுவதாக அவர்களின் அண்மை கணக்கெடுப்பு கூறுகிறது.

மருந்துகளை தவிர்க்கும் நோயாளிகளுக்கு கூடுதலாக வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, வாழ்க்கைத் தரமும் குறைகிறது. ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளுடன் புதியதும் கூடி, மருத்துமனையில் அடிக்கடி சேர்ந்து சிகிச்சைப் பெறும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் வேலைத் திறனும் பாதிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அனைவருக்கும் இலவசமா?

செலவளிக்கமுடியாதவர்களுக்கு மட்டும் இலவசம் என்று சிலர் கூறுகின்றனர்.

அனைவரும் இலவச மருந்து பரிந்துரைச் சீட்டுகளை பெறவேண்டும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

எது எப்படியிருந்தாலும் சரி, இங்கிலாந்தில் மருந்து பரிந்துரைச் சீட்டு தொடர்பான சீர்திருத்தங்கள் தேவை என்பது உறுதி.

ஆனால் அதை செய்யவதற்கான சிறப்பான வழிமுறை குறித்த ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

அரசு இதற்காக அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும், மக்களின் ஆயுள் அதிகரிக்க வேண்டுமானால், அதிக மருந்துகள் பரிந்துரை செய்யப்படவேண்டும்.

மருத்துவ பரிந்துரைச் சீட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானமானது, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகளுக்கு (என்.எச்.எஸ்) £ 500 மில்லியன் பணத்தை கொடுக்கும் நிலையில், இந்தக் கோரிக்கைகள் குறித்து சமநிலைப் பார்வையுடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆயிரம் மடங்கு வீரியமிக்க ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆயிரம் மடங்கு வீரியமிக்க ஆண்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்