தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும்: வடகொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பல ஆண்டுகளாக வட கொரியா மீது தொடர்ந்து வரும் ''யுக்திபூர்வமான பொறுமையுடன் கூடிய அணுகுமுறை`` தோல்வியடைந்துவிட்டதாகவும், தீர்க்கமான பதிலடியை கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

`பொறுப்பற்ற மற்றும் கொடூரமான ஆட்சியினால் இரு நாடுகளும் இணைந்தே அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம்` என தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார்.

வேறு ஒரு சிறந்த பாதையை விரைவாக தேர்ந்தெடுக்கும் படி வட கொரியாவை ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

வட கொரிய தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய அவசியம் இருப்பதாக தென் கொரிய அதிபர் மூன் தெரிவித்தார்.

மேலும், தனது நாடு பாதுகாப்பு சீர்திருத்தங்களைத் தொடரும் என்றும், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், வட கொரியா தொடர்பான விவாதங்களே பேச்சு வார்த்தையில் முக்கியமாக இடம் பெற்றது என்று கூறிய மூன், வலிமையான பாதுகாப்பே உண்மையான அமைதியை ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கொண்டுவரும் என்பதையும் மூன் வலியுறுத்தியுனார்.

வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், `வட கொரியாவுடன் கடைபிடித்து வந்த யுக்தி பூர்வமான பொறுமையுடன் கூடிய அணுகுமுறை சகாப்தம் தோல்வியடைந்து விட்டது என்றும், இதற்கு முன்னர் பலமுறை தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், ` வெளிப்படையாகச் சொன்னால், பொறுமை முடிவுக்கு வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீய உறவுகள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும், நம்முடைய கூட்டாளிகளையும், நம் சொந்த நாட்டு மக்களையும் வட கொரியா போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து மீட்டெடுக்கவும் அமெரிக்கா, வட கொரியா, ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தங்கள் கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

வட கொரியப் பணத்தை சர்வதேசப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சீன வங்கியின் மீது தடைகளை விதிக்கும் அமெரிக்கா மீது சீனா கோபமாக பதிலளித்ததையடுத்து டிரம்பின் இந்த அறிப்பு வெளியாகியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எடுக்கப்படும் தவறான நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் வலியுறுத்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

வட கொரியாவின் ஆயுத திட்டங்களுக்கு கொடுக்கப்படும் நிதியினை தடுத்த நிறுத்த முடியும் என்ற நோக்கத்தில் சீன கப்பல் நிறுவனம் மற்றும் இரண்டு சீன பிரஜைகள் மீதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

`நாங்கள் அந்த பணத்தை பின் தொடர்வோம், அதனை தடுத்து நிறுத்துவோம்,` என்று அமெரிக்க நிதித்துறை செயலர் ஸ்டீவன் மெனுசின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆனால், இந்த விவகாரத்தில் சீனா நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான பதிலடி இது இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கை சீனாவுக்கு எதிரானது அல்ல. இது ஒரு வங்கியையும், சீனாவிலுள்ள தனிநபர்களையும், நிறுவனங்களையும் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை` என்று அவர் கூறியுள்ளார்.

பியாங்கியாங்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் ஏவுகணை சோதனைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்த மாதத் தொடக்கத்தில் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த ட்ரம்ப் சீனாவின் நடவடிக்கைகள் வேலை செய்யவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்