அமெரிக்காவில் திருநங்கைகளை ராணுவத்தில் சேர்க்கும் திட்டம் ஒத்திவைப்பு

திருநங்கைகளை ராணுவத்தில் பணிக்குச் சேர்க்கும் திட்டத்தை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை /AFP/Getty Images

அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிய திருநங்கைகளுக்கு இருந்த தடையை கடந்த ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா நீக்கினார்.

இந்த நடவடிக்கைகளின் தாக்கங்களை மதிப்பிட ஆயுதப்படைக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

திருநங்கைகளை ராணுவத்தில் சேர்ப்பதை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பதாக அவர் கூறியுள்ளார்.

ராணுவ சேவையில் ஈடுபடுவோர் தங்களுடைய பணியை சிறப்பாகச் செய்யும் வரை பாலின அடையாளம் முக்கியமல்ல என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த முடிவுக்கு எதிராக குரலெழுப்பியுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்