பிட்காயின்களை பிணைத்தொகையாக கேட்கும் இணையவழி தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் :யுக்ரேயின்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வாரத் தொடக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள தொழில்களை குறிவைத்து நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலில் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக யுக்ரேயின் தெரிவித்துள்ளது.

யுக்ரேயினின் பாதுகாப்பு சேவை நிறுவனமான எஸ் பி யு, இத்தாக்குதலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் நாட்டின் தலைநகரான கீவ் மீது தாக்குதலுக்கும் ஒரு தொடர்பு உள்ளதைக் குறிக்கும் தகவல்களை தான் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.

வைரஸ் பரவுவதற்கு முன்பாக தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களில் யுக்ரேயினிய நிறுவனங்கள்தான் முதலில் கணினிகளுக்கு தீங்கிழைக்கும் மென்பொருள் குறித்து கடந்த செவ்வாய்யன்று முதலில் புகார் தெரிவித்தன.

ஆனால், ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

மேலும், யுக்ரேயினின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறையில் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ், கணினிகளை செயலிழக்க வைத்து பிட்காயின் என்ற டிஜிட்டல் கரன்ஸி கொண்டு பிணைத்தொகையை செலுத்துமாறு கோரியிருந்தது.

எனினும், இதே வைரஸ் தாக்குதல் ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களை தாக்கியதை அடுத்து அங்குள்ள சில இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், இத்தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யாவில் செயல்படவில்லை என்று வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்