Woman, 92, dragged along floor by robber
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹேக்னியில் 92 வயது மூதாட்டியை தரையில் தரதரவென இழுத்து சென்ற திருடன்

  • 2 ஜூலை 2017

92 வயது மூதாட்டி ஒருவர், அவரை பின்தொடர்ந்து வந்து கைப்பையை பிடுங்க முயன்ற திருடனால் தரையில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட சம்பவம் கிழக்கு லண்டனின் நிகழ்ந்துள்ளது.

ஹேக்னி என்னுமிடத்தில் இருக்கின்ற மருத்துவ மையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, இந்த திருடன் அவரது கைப்பையை பிடுங்க முயல அவர் தரையில் இழுத்து செல்லப்பட்டார்.

இதனால், வலி தாங்க முடியாமல், 50 பவுண்ட் மதிப்படைய செல்பேசி, பணமாக 100 பவுண்ட் மற்றும் பயண பாஸ் ஆகியவற்றை வைத்திருந்த கைப்பையை அவர் திருடனிடமே விட்டுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

"நான் பார்த்ததில் இந்த நபர் அனுபவித்திருக்கும் மாபெரும் உளவியல் அதிர்ச்சி மிகவும் மோசமானதாக இருக்கலாம் என்று துணை காவல்துறை ஆய்வாளர் பால் ரிட்லே கூறியிருக்கிறார்.

இந்த செவ்வாய்கிழமை தாக்குதல் சம்பவம் பற்றி தகவல் அறிந்தவர்கள் ஸ்காட்லாந்து யாட் காவல்துறை தலைமையகத்தை தொடர்புகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடையவை