செளதி அரசரை கடவுளுக்கு நிகராக புகழ்ந்த பத்திரிக்கையாளர் இடைநீக்கம்

செளதி நாட்டின் அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்ந்த காரணத்தால் பத்திரிக்கையில் கட்டுரை எழுதுபவர் ஒருவர் தனது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

ரமலான அல் அன்சி என்னும் கட்டுரையாளர், அல் ஜசீரா பத்திரிக்கையில் பொதுவாக கடவுளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கொண்டு அரசரை பாராட்டினார்.

அரசரை அளவிற்கு அதிகமாக புகழ்வது சகஜமான ஒன்றுதான் மேலும் அது எதிர்பார்க்கப்படும் ஒரு விஷயமும் கூட. ஆனால் கடவுளுடன் ஒப்பிடுவது என்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று.

அதன் விளைவாக "மிகவும் அதிர்ச்சியடைந்த" அரசர் சல்மான், அன்சியை இடைநீக்கம் செய்ய உத்தரவு வழங்கியதாக செளதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

வெள்ளிக்கிழமையன்று அந்த செய்தித்தாள் மன்னிப்பு கோரியது. அதில் அன்சி, அரசர் சல்மானை 'ஹலீம்' அல்லது மிகவும் பொறுமையானவர் மற்றும் 'ஷ்தீத் அல் இகாப்' என குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டுச் சொற்களுமே கடவுளை குறிப்பதற்கான சொற்களாகும்.

"இஸ்லாமியர்களின் இரண்டு புனித மசூதிகளாக கருதப்படும் மெக்கா மற்றும் மதினா ஆகியவற்றை பாதுகாக்கும் அரசரை குறித்து எழுத்தாளர் அவ்வாறு எழுதியது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அரசருக்கு கடவுள் அத்தகைய குணங்களை கொடுத்திருந்தாலும், அவ்வாறு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; இரண்டு புனித மசூதிகளை, இஸ்லாமை, மக்களை, தாயகம் மற்றும் மக்களை காப்பதனால் கடவுள் அவரை பாதுகாக்கட்டும்`` என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

அந்த செய்தித்தாளிற்கு எதிரான நடவடிக்கையும் எடுக்கப்படும் என சில செளதி ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.

குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?

பிபிசியின் பிற செய்திகள்:

கதிராமங்கலத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''

நவோதயா பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் இல்லாதது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்