நடுக்கடலில் குழந்தைகளுடன் தவிக்கும் அகதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நடுக்கடலில் குழந்தைகளுடன் தவிக்கும் அகதிகள்

குடியேறிகளின் நெருக்கடி தொடரும் நிலையில், லிபியாவில் உள்ள ஆட்களை கடத்திச் செல்லும் வலையமைப்புகள் பெருமளவில் விரிவடைந்து வருவதாகவும், வரவர அவர்கள் தொழில் ரீதியில் பலமடைந்து வருவதாகவும் ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.

பல படகுப்பயணங்களின் ஆரம்ப இடமான லிபியாவின் கடற்கரை காவற்படைக்கு உதவுதல் உட்பட குடியேறிகளின் படையெடுப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக பாரிஸில் நடந்த சந்திப்பொன்றில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவற்றின் உள்துறை அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை மத்திய தரைக்கடலில் அகப்பட்ட அகதிகள் குழு ஒன்றை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு மீட்பதை பிபிசி நேரடியாக படம் பிடித்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்