எட்டிஹாட் விமானத்தில் எலக்ட்ரானிக் பொருள்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்

லேப்டாப் சோதனை படத்தின் காப்புரிமை EPA

அபுதாபியில் இருந்து அமெரிக்கா செல்லும் 'எட்டிஹாட்' நிறுவன விமானங்களில் செல்லும் பயணிகள் இனி தங்களோடு லேப்டாப் உள்ளிட்ட பெரிய எலக்ட்ரானிக் பொருள்களைக் கொண்டு செல்லமுடியும். அவற்றைத் தம் பயணத்தின்போது பயன்படுத்தவும் முடியும்.

லேப்டாப் மற்றும் பிற பெரிய எலக்ட்ரானிக் கருவிகளை பயணிகள் தங்களோடு எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்டன. அதன் மூலம், பயணிகள் இத்தகைய கருவிகளை விமானத்தின் சரக்குப் பகுதியில் மட்டுமே கொண்டு செல்லமுடியும்.

பயணிகளை கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்த எட்டிஹாட் வகுத்த திட்டம் அமெரிக்க அதிகாரிகளுக்கு திருப்தி அளித்ததாகவும், அதனால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அபுதாபியில் இருந்து அமெரிக்காவில் உள்ள ஆறு விமான நிலையங்களுக்கு வாரத்துக்கு 45 விமானங்களை இந் நிறுவனம் இயக்குகிறது.

பெரிய எலக்ட்ரானிக் கருவிகளில் வெடி குண்டுகளை ஒளித்துக் கடத்தமுடியும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை MARWAN NAAMANI/AFP/Getty Images

அமெரிக்கா விதித்த இத்தடையால் எட்டு முஸ்லிம் நாடுகளில் உள்ள பத்து விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் விமானங்கள் பாதிக்கப்பட்டன.

இக் கட்டுப்பாடுகளின்படி, 16 சென்டிமீட்டர் நீளம், 9.3 செ.மீ. அகலம், 1.5 செ.மீ. தடிமன் அளவை விடப் பெரிய எலக்ட்ரானிக் பொருள்களை அதற்கென குறிப்பிடப்பட்ட சரக்குப் பொதியில் வைக்கவேண்டும். மருத்துவக் கருவிகளுக்கும், திறன்பேசிகளுக்கும் (ஸ்மார்ட் போன்கள்) இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

"சலவை எந்திரம்" போன்று குலுங்கிய ஏர் ஏசியா விமானம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
“சலவை எந்திரம்” போன்று குலுங்கிய ஏர் ஏசியா விமானம்

தொடர்புடைய செய்திகள்

எட்டிஹாட் அறிவித்துள்ள புதிய ஏற்படுகளின்படி, அமெரிக்காவில் இறங்கியபின் பயணிகளிடம் நடத்தப்படவேண்டிய அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லை சார்ந்த சோதனைகள் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலேயே நடத்தப்படும்.

படத்தின் காப்புரிமை Lennart Preiss/Getty Images

இக் கூடுதல் சோதனைகளை நடத்த மிகக் குறைந்த நேரமே பிடிக்கும் என்று அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளான பிற விமான நிறுவனங்களும், விமான நிலையங்களும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் செய்யப்பட்டதைப் போன்ற மாற்றத்தை தங்கள் நாட்டு விமான நிலையங்களிலும் செயல்படுத்தத் தேவையான பேச்சுவார்த்தைகளை அந்நாட்டின் விமான நிலைய ஆணையமும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் மேற்கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

எதிர்கால வானை ஆளப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
எதிர்கால வானை ஆளுப்போகும் எலெக்ட்ரிக் விமானங்கள்

பிற செய்திகள்

அமெரிக்க நெடுஞ்சாலையில் லாரி மீது மோதிய விமானம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்க நெடுஞ்சாலையில் லாரி மீது மோதிய விமானம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்