அனைத்து மத திருமணங்கள் பதிவு கட்டாயம்: இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை

இந்தியாவில் மத திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/AFP/Getty Images)

கட்டாய திருமணப் பதிவு என்ற தலைப்பிலான அறிக்கையை இந்திய சட்ட ஆணையம் அதன் தலைவரும் நீதிபதியுமான பி.எஸ்.செளஹான் தலைமையில் தயாரித்துள்ளது.

சமூகத்தில் காணப்படும் குழந்தைத் திருமணம், இரு தார மணம் புரிதல், பாலின ரீதியிலான வன்முறை போன்றவற்றைத் தடுக்கும் நோக்குடன், திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு, இந்திய சட்ட ஆணையத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி கடிதம் மூலம் கேட்டுக் கொண்டது.

38 பக்க அறிக்கை

இதையடுத்து, பொதுமக்களின் கருத்துகள், பொது நல அமைப்புகள், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவைகளின் கருத்துகளைப் பெற்று, 38 பக்க அறிக்கையை இந்திய சட்ட ஆணையம் தயாரித்தது.

அந்த அறிக்கை, மத்திய சட்டத் துறை அமைச்சர் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் இன்று (ஜூலை 4) அளிக்கப்பட்டது.

அதில், இந்தியாவில் செய்யப்படும் அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைய தலைவர் விளக்கம்

இது குறித்து இந்திய சட்ட ஆணைய தலைவரும் நீதிபதியுமான பி.எஸ்.செளஹான் பிபிசி தமிழிடம் கூறுகையில், பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் அரசு அலுவலரே திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்றும், இதற்கு தனியாக சட்டமோ சட்டத்திருத்தமோ அவசியமில்லை என்று தெரிவித்தார்.

திருமணப் பதிவை செய்யத் தவறினால், நாள் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் அதிகபட்சமாக நூறு ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி செளஹான் கூறினார்.

இவ்வாறு செலுத்தப்படும் அபராதம், தண்டனை கிடையாது என்றும் திருமண பதிவை உரிய காலத்தில் செய்யாமல் தவறியதற்கான தாமத கட்டணமாகக் கருத வேண்டும் என்று நீதிபதி செளஹான் மேலும் தெரிவித்தார்.

பிபிசியின் பிற செய்திகள்:

இஸ்ரேலில் இன்று சுற்றுப் பயணத்தை துவக்குகிறார் நரேந்திர மோதி

விபத்து: காரை நீச்சல் குளத்தில் மூழ்கடித்த 70 வயது பெண்மணி

"விம்பிள்டன் 2017" தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்